கொழுகொழுனு இருக்கும் இந்த க்யூட்டான நடிகை யார் தெரியுமா? வாரிசு நடிகரின் பொண்டாட்டியாம்

பொதுவாக ஹீரோ, ஹீரோயின்களின் சிறு வயது புகைப்படங்களை பார்த்தால் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். அவ்வாறு இந்த புகைப்படத்தில் கொழு கொழு வென்று இருக்கும் க்யூட்டான நடிகை வாரிசு நடிகரை மணந்திருக்கிறார்.

கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த நடிகை குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் நுழைந்து விட்டார். அதோடு மலையாள படங்களில் நடித்து வந்த இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் பெற்றிருக்கிறார்.

ஆனால் நடிகை கதாநாயகியாக சில படங்களில் தான் நடித்திருக்கிறார். இந்தப் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பிரபல நடிகரின் வாரிசு ஒருவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

கொழுகொழுனு இருக்கும் மஞ்சிமா மோகன்

தமிழில் அச்சம் என்பது மடமையடா, எஃப் ஐஆர் போன்ற படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். இவர் கௌதம் கார்த்திக் உடன் தேவராட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் இருவரும் காதலித்து வந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் குழந்தை முதலே கொழுகொழுவென இருந்த மஞ்சுமா மோகன் ஹீரோயின் ஆனதும் நிறைய விமர்சனங்கள் வர ஆரம்பித்தது.

அவரது உடல் எடையை வைத்து கேலி, கிண்டல் செய்த பலருக்கும் அவ்வப்போது பதிலடியும் கொடுத்து வந்தார். தன்னுடைய எடை தனக்கு எப்போதுமே குறையாக தெரியவில்லை என்று சொல்லி வந்தார்.

ஆனால் சமீபகாலமாக உடற்பயிற்சி செய்து மஞ்சிமா மோகன் தனது உடல் எடையை குறைத்து வருகிறார். அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →