தனுஷுடன் இணையும் பிரபல இயக்குனர்.. இத்தனை வருஷம் போராட்டத்திற்கு பிறகு இப்பத்தான் வாய்ப்பு

தனுஷுக்கு மாறன் படம் சரியாக போகவில்லை. இதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்தால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் தனுஷ் மீண்டும் படங்களை இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது. அதில் விஜய் டிவி மூலம் பிரபலமான ரோபோ ஷங்கர் மற்றும் ராமர் நடிக்க உள்ளார்கள். இது காமெடி படமாக இருக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் சுந்தர்சி நீண்ட வருடமாக தனுஷை வைத்து படம் இயக்க வேண்டும் என ஆசைபட்டுள்ளார்.

ஆனால் அதற்கான வாய்ப்பு சரியாக கிடைக்கவில்லை. தற்போது தனுஷ் ஆக்சன் படங்களின் தான் நடித்து வருகிறார். தனுஷ் குடும்பப்பாங்கான காமெடி படங்களில் நடிக்க ஆசைபட்டுள்ளார். மேலும், தனுஷ் காமெடி கலந்த படங்களில் நடித்த பல வருடங்கள் ஆகிறது.

சுந்தர் சி காமெடி படங்களை எடுத்து வெற்றி கண்டவர். பேய் படமாக இருந்தாலும் அதில் நகைச்சுவையுடன் எடுப்பதில் வல்லவர் சுந்தர்சி. இந்நிலையில் சுந்தர் சி தனுஷிடம் கதையை கூறியுள்ளார். அதற்கு தனுஷ் ஆக்ஷன் படமா, காமெடி படமா என கேட்டுள்ளார்.

இதற்கு சுந்தர் சி எனக்கு எப்போதுமே காமெடி படங்கள்தான் கைகொடுக்கும் என கூறியுள்ளார். மேலும், இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிறிது யோசித்து விட்டு தனுஷ் நான் இந்த படத்தில் நடிக்க சம்மதிக்கிறேன் என கூறியுள்ளார்.

முதல் முறையாக சுந்தர் சி மற்றும் தனுஷ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதால் இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →