காதலர் தினத்தில் வெளியாகும் 3 படங்கள்.. கம்பேக் கொடுப்பாரா கவின்.?

February 14 Release Tamil movies : 2025 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று மூன்று படங்கள் வெளியாக இருக்கிறது. பொதுவாகவே பண்டிகை காலங்களில் படம் வெளியாகும் நிலையில் குறிப்பாக காதலர் தினத்தன்று ஜோடியாக படத்தை பார்க்க பலர் ஆசைப்படுவார்கள்.

காதலர்கள், புதிதாக திருமணம் செய்தவர்கள் என பலரை தியேட்டரில் பார்க்க முடியும். காதல் பொங்கும் வகையில் சில படங்கள் வெளியாகும். இந்த வகையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் படங்களை பார்க்கலாம்.

கவின் நடிப்பில் கடைசியாக வெளியான ஸ்டார் மற்றும் பிளடி பக்கர் படங்கள் பெரிய அளவில் போகவில்லை. இந்த சூழலில் அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் கிஸ். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.

பிப்ரவரி 14 வெளியாகும் படங்கள்

மேலும் இந்த படத்தில் அனிருத் இசையமைத்து வந்த நிலையில் சில பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் வேறு இசையமைப்பாளர் கமிட்டாகி ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படம் காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது. இதன் மூலம் கவின் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். ஏற்கனவே அவர் இயக்கி நடித்திருந்த ராயன் படம் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இப்போது தனுஷின் சகோதரி மகன் பவிஷை ஹீரோவாக தனுஷ் அறிமுகம் செய்கிறார்.

மேலும் இப்படத்தில் அனிதா சுரேந்திரன், பிரியா வாரியர் ஆகியோர் நடித்துள்ள நிலையில் இந்த படம் பிப்ரவரி 14 திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் படத்தை இயக்கியிருந்த மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் படம் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படத்தையும் காதலர் தினத்தில் வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர். ஆகையால் இந்த ரேசில் எந்த படம் அதிக வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment