ரஜினி இல்ல.. முதல் முறையாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய ஸ்டார் நடிகர் யார் தெரியுமா?

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலர் இருக்கின்றனர்.  ஷாருக்கான், அல்லு அர்ஜுன், விஜய் போன்ற நடிகர்கள் ஒரு படத்திற்கு 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள்.  ஆனால் இதற்க்கு விதை போட்ட நடிகர் யார் தெரியுமா?

முதல் முறையாக ஒரு படத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் ஒரு நடிகர்.  அந்த நடிகர் அமிதாப் பச்சனோ அல்ல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோ இல்லை.  1970-80 களுக்குப் பிறகு திரைப்படங்கள் பெரிய அளவில் வளர்ந்ததால் நடிகர்களின் சம்பளமும் அப்போது தான் உயர்ந்தது. அப்போது உச்ச நடிகர்களாக வலம் வந்தவர்களின் சம்பளம் உட்சபட்சமாக ரூ. 10 லட்சமாகத் தான் இருந்தது. அப்போது அமிதாப் பச்சன் 50 லட்சம் ரூபாய் வரைக்கும் ஒரு படத்திற்கு டிமாண்ட் செய்ததாக கூறப்படுகிறது.  

அதற்க்கு பிறகு 90 காலகட்டத்தில் நடிகர்களின் சம்பளம் உயர்ந்தது.  அப்போது வாங்கும் அதிக பட்ச சம்பளமாக 50 லட்சம் இருந்தது.  அதே காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமல் ஹாசன், சன்னி தியோல் போன்ற மற்ற நடிகர்கள் ரூ 60 முதல் 80 லட்சம் சம்பளமாகப் பெற்றனர்.

முதல் முறையாக 1 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற நடிகர்

இப்படி இருக்க முதல் முறையாக 1 கோடி ரூபாய் சம்பளத்தை தொட்ட நடிகர்கள், ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் என்று நாம் நினைத்திருப்போம்.  ஆனால் அது தான் இல்லை.  முதல் முறையாக 1 கோடி ரூபாய் சம்பளத்தை ஒரு தெலுங்கு நடிகர் தான் வாங்கி இருந்தார். 

1992ம் ஆண்டு வெளியான ‘ஆபத்பாந்தவுடு’ என்ற படத்துக்காக ரூ. 1.25 கோடி சம்பளமாகப் பெற்றார் அந்த நடிகர். அதன் மூலம் இந்திய சினிமாவில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையும் அவரை வந்து சேர்ந்தது. அந்த நடிகர் வேறு யாரும் இல்லை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான்.

இன்று இவர் ஒரு படத்திற்கு 40 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.  ஆரம்பத்தில் சரசரவென இவர் சம்பளத்தில் ஏறினாலும், தற்போது வயது மூப்பு காரணமாக சற்று தோய்ந்துள்ளார்.  ஆனால் இப்போதும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு 100 கோடி-க்கு மேல் சம்பளம் பெறுகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment