கீர்த்தி சுரேஷை தொடர்ந்து பிரபல நடிகைக்கு விரைவில் டும்டும்டும்.. 35 வயதில் காதலனை கரம் பிடிக்கும் பியூட்டி

Keerthy Suresh : சமீபத்தில் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 12ஆம் தேதி கோவாவில் திருமணம் என்பதுதான். அதாவது தனது பள்ளி பருவத்தில் இருந்து நீண்ட கால நண்பரான ஆண்டனி தட்டிலை கீர்த்தி சுரேஷ் மணம் முடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஆனாலும் நம்பகத் தகுந்த ஊடகங்களில் இருந்து இந்த விஷயம் கசிந்து இருக்கிறது. கீர்த்தி சுரேஷை தொடர்ந்து பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

அதாவது 35 வயதாகும் தமன்னா தற்போது வரை சிங்கிளாக இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் பல டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் நடிகர் கார்த்தி உடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு அக்கட தேசம் சென்றதால் தமன்னாவுக்கு இங்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லை.

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து விரைவில் பிரபல நடிகைக்கு திருமணம்

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய குத்தாட்டம் மீண்டும் அவரை தமிழ் சினிமாவில் கொண்டாட ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து வெப் சீரிஸ் போன்றவற்றில் தாராள கவர்ச்சி காட்டி தமன்னா நடிக்க ஆரம்பித்தார். இந்த சூழலில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் விஜய் வர்மாவை தமன்னா டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் இவர்கள் இருவரும் 2025 இல் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் வாழ்வதற்காக ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை தேடி வருவதாகவும் அவரது நெருங்கிய வட்டாரத்திலிருந்து சொல்லப்படுகிறது.

மேலும் தமன்னா விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு கோலிவுட்டில் பிரபல நடிகைகளாக வளம் வந்த நடிகைகள் அடுத்தடுத்து திருமணம் செய்து வருகிறார்கள். சமீபத்தில் ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment