கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் சிறுத்தை சிவா.. கங்குவா 2 அப்டேட் கொடுத்த ஞானவேல் ராஜா

Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா இரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள கங்குவா வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. சில வருடங்களாக கடின உழைப்பை கொடுத்து நடித்துள்ள இப்படத்தை தான் அவர் பெரிதும் நம்பி இருக்கிறார்.

மேலும் உலக அளவில் பல மொழிகளில் வெளியாகும் இப்படம் நிச்சயம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என இப்போதே கணிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் வேற லெவல் வரவேற்பை பெற்றது.

அந்த வரிசையில் இரண்டாம் பாடலும் இந்த மாதம் வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து டீசர், டிரைலர் என அடுத்தடுத்த சம்பவங்கள் நடைபெற இருக்கின்றது. அதே சமயம் இப்போதிலிருந்து படம் பற்றிய எதிர்பார்ப்பை தயாரிப்பாளர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறார்.

சிறுத்தை, சிங்கம் கூட்டணியின் தரமான சம்பவம்

சமீப காலமாக கங்குவா குறித்து பல அப்டேட் வெளியிட்டு வரும் இவர் தற்போது இரண்டாம் பாகம் பற்றியும் ஒரு குறிப்பு கொடுத்துள்ளார். அதாவது கங்குவா முதல் பாகத்தோடு எந்த படங்கள் வேண்டுமானாலும் வெளிவரட்டும்.

ஆனால் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகும்போது ஒரு படம் கூட வர முடியாது. அந்த அளவுக்கு படம் தரமான சம்பவமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் சொல்வதை வைத்து பார்க்கும் போது சிறுத்தை சிவா கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குவார் போல தெரிகிறது.

ஏற்கனவே முதல் பாகம் ரசிகர்களுக்கு வெறித்தனமான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கார்த்தியும் இதில் இருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த சூழலில் இரண்டாம் பாகத்திற்கான ஆர்வத்தையும் ஞானவேல் ராஜா இப்போது தூண்டி இருக்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →