ஐயோ கோட் மொத்த சஸ்பென்சும் உடைஞ்சு போச்சே.. உளறிய பிரேம்ஜி, நொந்து போன ப்ரொடியூசர் அக்கா

GOAT: விஜய் வெறியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கோட் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர இருக்கிறது. அதற்கு முன்பாகவே இதன் ஆரவாரம் சோசியல் மீடியாவில் கலை கட்ட தொடங்கிவிட்டது.

தயாரிப்பாளரில் தொடங்கி இயக்குனர் நடிகர்கள் என அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கம் பேட்டி கொடுத்து எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர். அதேபோல் நேற்று நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்விலும் பல சுவாரசியமான விஷயங்கள் பகிரப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் ட்விஸ்ட் வைக்கிறேன் என்ற பெயரில் படத்தின் முக்கிய சஸ்பென்சை உடைத்து வரும் சம்பவமும் நடந்து வருகிறது. அதாவது பிரேம்ஜி, வைபவ் அவ்வளவு ஏன் வெங்கட் பிரபு கூட பேட்டிகளில் சில விஷயங்களை ஆர்வக்கோளாறு காரணமாக உளறி விடுகின்றனர்.

பிரேம்ஜி சொன்ன சீக்ரெட்

அதிலும் பிரேம்ஜி படத்தில் நான் சினேகாவின் தம்பி என்ற சஸ்பென்சை உடைத்துள்ளார். மேலும் வயதான தளபதியை நான் மாமா என்று கூப்பிடுவேன் இளைய தளபதி என்னை மாமா என்று கூப்பிடுவார் என இஷ்டத்துக்கு கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இது போதாது என்று பேட்டி எடுப்பவர்களும் வேண்டுமென்று கிடுக்கு பிடி போட்டு பல தகவல்களை வாங்கி விடுகின்றனர். அதில் வெங்கட் பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ இருக்கலாம் இல்லாமலும் போகலாம் என பட்டுப் படாமல் கூறியது அதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

மேலும் வைபவ் படத்தில் தளபதியின் அறிமுக காட்சி வேற லெவலில் இருக்கும். மூன்று மணி நேரம் படம் போவது தெரியாது. அவருடைய டான்ஸ் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என சில விஷயங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனால் பாவம் ப்ரொடியூசர் அக்கா அர்ச்சனா தான் நொந்து போயிருக்கிறார். விஜயின் தீவிர ரசிகையான அவர் ட்ரெய்லரில் படத்தின் கதை தெரிந்து விடக்கூடாது என இயக்குனருக்கு ஏகப்பட்ட கெடுபிடி கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு நேர் மாறாக மொத்த கதையையும் சொல்லிவிட்டனர் பிரேம்ஜி அண்ட் கோ.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →