GVM: பெயர் போனதால் மலையாள ஹீரோவிடம் சரணடைந்த கௌதம் மேனன்.. பெட்டி படுக்கையோடு கிளம்பிய நாஞ்சிலர்

கௌதம் வாசுதேவ் மேனன் தமிழில் ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகி உள்ளது. கடைசியாக அஜித்தை வைத்து எடுத்த படம் என்னை அறிந்தால் அதுவும் 2015 ஆம் ஆண்டு தான். அதற்கு அடுத்த ஆண்டு சிம்புவை வைத்து எடுத்த படம் “அச்சம் என்பது மடமையடா” . இந்த படத்திற்கு பின்னர் கௌதமிற்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை. 

கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஹிட் கொடுக்க முடியாமல் தினறி வருகிறார் கௌதம். எல்லா ஹீரோக்களுக்கும் சொல்லிக் கொள்ளும்படி ஒரு தரமான ஹிட் கொடுத்து தூக்கிவிட்ட இவருக்கு இப்படி ஒரு நிலைமை . கடைசியாக இவர் எடுத்த மூன்று நான்கு படங்கள் ப்ளாப் ஆனதால் இவர் பெயர் கொஞ்சம் அடிபட்டது.

 இப்படி தொடர்ந்து பல தோல்வி படங்கள் கொடுத்ததால் தமிழில் இவர் மார்க்கெட்  கேள்விக்குறியானது. இவர் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தை இன்னும் ரிலீஸ் செய்ய முடியாமல் பெரும் தலைவலி இருக்கிறார்.

இப்பொழுது தமிழ் நமக்கு கை கொடுக்கவில்லை என்று மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் அடுத்த படத்தில் நினைக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் சூட்டிங் தொடங்கவிருக்கிறது. மம்முட்டி மலையாள திரையுலகில் பீக்கில் இருக்கிறார். கௌதம் தொடர் தோல்விகள் கொடுத்தாலும் மம்மூட்டி அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்.

 காதல் தி கோர், ஆபிரகாம் ஒஸ்லர், கண்ணூர் ஸ்குவாட் என மம்மூட்டி இப்பொழுது பல ஹிட் படங்கள்  கொடுத்து மலையாள சினிமா உலகை புரட்டி போட்டு வருகிறார். சரியான காம்பினேஷன் இப்பொழுது செட் ஆகி உள்ளது. கௌதம் இதை பயன்படுத்திக் கொண்டால் நிச்சயமாக செகண்ட் இன்னிங்ஸில் செஞ்சுரி தான்

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →