வளரும் முன் தலக்கணத்தையும், கொம்பையும் சீவும் நடிகர்.. விஜய், அஜித் ரேஞ்சுக்கு அலைபாயும் மனசு

விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்க போராடி வருகிறார் ஆனால் இவர்கள் இருவரது இடத்தையும் பிடித்து விட்டதாக வளரும் நடிகர் போடும் கும்மாளம் தான் இப்பொழுது சினிமா வட்டாரத்தில் எரிச்சலை கிளப்பி உள்ளது. நடித்த ஏழு படங்களில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படமும் ஹிட் கொடுக்கவில்லை.

தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லோரும் இவர் பக்கமே தலை வைத்து படுக்க முடியாத அளவிற்கு சமீபகாலமாக ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகிறார். இவரைப் பற்றி கேட்கிற விஷயங்கள் எல்லாம் இந்த நடிகரா இப்படி என அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

விஜய் அஜித்துக்கு பின் சினிமாவில் நான் தான் என அவரது மனது அலைபாய்ந்து வருகிறது. சமீபத்தில் நடித்த படம் படுமோசமான பிளாப் ஆகியும் நடிகர் திருந்திய பாடில்லை. டாடா, லிப்ட், ஸ்டார் போன்ற படங்களில் நாயகனாக நடித்த கவின் இப்பொழுது ஓவர் அழிச்சாட்டியம் செய்து வருகிறார்.

கிஸ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நுங்கம்பாக்கத்தில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இரண்டாவது தளத்தில் நடக்கும் ஷூட்டிங்கிற்கு லிப்ட் வேலை செய்யவில்லை என வீட்டுக்கு கிளம்பி விட்டாராம். இப்படி தொடர்ந்து பல இடையூறுகள் கொடுத்து வருகிறாராம்.

அது மட்டும் இன்றி விஜய் யூஸ் பண்ணிய கேரவன் தான் வேண்டுமென, தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட்டில் ஓவரா ஆட்டம் போட்டு வருகிறாராம். இவருக்கு எல்லா வசதிகள் கொடுத்தும் கூட அந்த கேரவன் வந்த பிறகு சூட்டிங் வருகிறேன் என தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறாராம். இதனால் கிஸ் பட தயாரிப்பாளர் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment