இவ்வளவு ரணகளத்திலும் குணசேகரனின் நடிப்பு மட்டும் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. குணசேகரனோ ஜெயிலில் இருந்து வெளியே வந்த பரோல் கைதி. அதைப்பற்றி யாரும் அந்த வீட்டில் யோசித்துக் கூட பார்க்கவில்லை ஆனால் போலீஸ், கோர்ட், கேஸ் என்று கதை நகர்ந்துbகொண்டு தான் இருக்கிறது
ஜனனி விட்ட சவாலால், தூக்கம் கெட்டுப்போன குணசேகரன் தன்னுடைய எடுபிடிகளை அழைத்து இரவில் தோட்டத்தில் உட்கார்ந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். எப்படியாவது தர்ஷனுக்கும், அறிவுக்கரசியின், தங்கைக்கும் திருமணத்தை முடித்து ஜெயிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் ஞானம் வெயிலிலிருந்து ஜாமினில் வெளி வருகிறார். இவ்வளவு அடிபட்டும் திருந்தாமல் வீட்டிற்கு வரும் ஞானம் யாரிடமும் பேசாமல் அமைதியாய் இருக்கிறார். ஓடோடி வந்த மனைவி ரேணுகாவை அறைந்து விட்டு பேச ஆரம்பிக்கிறார்.
இவளை அடித்து விட்டு தான் உங்களிடம் பேச வேண்டும் என இருக்கிறேன் அண்ணா என குணசேகரன் பக்கம் சாய்ந்து மீண்டும் முரட்டு முட்டா பீஸ் நான் என நிரூபிக்கிறார். நான் ஜெயிலில் இருக்கும் போது உங்களை இவர்கள் என்ன பாடு படுத்தினார்கள் என்பது எனக்கு தெரியும், என ராமர் சொல் தவறாத லட்சுமணன் போல் நடந்து கொள்கிறார்,
என் தம்பி வந்து விட்டான் அவன் தான் எனக்கு யானை பலம் என்றெல்லாம் குணசேகரன் ஆர்ப்பரிக்கிறார். ஞானம் ஜெயிலுக்கு போவதற்கு காரணமே குணசேகரன் தான். பாட்டு வாத்தியார் கேசில் தனது வலது கரமான கதிரை அனுப்பாமல் ஞானத்தை ஜெயிலுக்கு அனுப்பியதே அவர்தான்.