H வினோத்தையும், லோகேசையும் வார் பிடித்த தயாரிப்பு நிறுவனம்.. வேற லெவல் போனதால் வந்த நெருக்கடி

எச் வினோத், லோகேஷ் கனகராஜ் கோடம்பாக்கத்தில் மோஸ்ட் வான்டெட் லிஸ்டில் இருக்கும் இரண்டு இயக்குனர்கள். ரெண்டு பேருமே இப்பொழுது பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். மாஸ் ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் என இவர்கள் வாழ்க்கை வேற லெவலில் சென்றுவிட்டது.

விஜய்யின் கடைசி படமாகிய ஜனநாயகன் படத்தை H.வினோத் இயக்கி வருகிறார். மற்றொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்து இவர்களுக்காக ஒரு தயாரிப்பாளர் காத்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் இவர்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டவர்.

2017ஆம் ஆண்டு மாநகரம் படத்தில் ஆரம்பித்த லோகேஷ் கனகராஜின் சினிமா கேரியர் இன்று கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என வேற லெவலில் போய்விட்டது. கமல், ரஜினி, விஜய், என பெரிய மாஸ் வட்டாரத்தில் மட்டுமே பயணித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜுக்கு சக போட்டியாளர் ஹச் வினோத் என்று கூறலாம். இவரும் 2014 ஆம் ஆண்டு சதுரங்க வேட்டை படத்தில் தனது சினிமா கேரியரை தொடங்கினார். அதன் பின் தீரன் அதிகாரம் ஒன்று, மேற்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, ஜனநாயகன் என தன்னுடைய கேரியரின் உச்சத்துக்கு சென்றுவிட்டார்.

ஆரம்பத்தில் இவர்கள் பயணித்தபோது இவர்களால் இயக்கப்பட்ட கைதி மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பதாக திட்டமிட்டனர். இப்பொழுது பெரிய பட்ஜெட் மற்றும் மாஸ் ஹீரோ என்று போய்விட்டதால் அந்த படங்களை கண்டு கொள்வதில்லை. இதனால் இந்தப் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் நிறுவனர் எஸ் ஆர் பிரபு இவர்களை இந்த படம் முடித்து தருமாறு சாட்டையை சுழற்றி உள்ளார்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment