தளபதி 69 ஸ்கிரிப்டிலேயே விரல்விட்டு ஆட்டும் எச் வினோத்.. சம்பவத்துக்கு ஸ்கெட்ச் போட்ட தளபதி

Thalapathy 69: தளபதி விஜய் எல்லோருடைய கணிப்புப்படி அரசியல் கட்சி தொடங்கி விட்டார். அவருடைய ரசிகர்களும் அவருக்கு ஓட்டு போட்டு முதலமைச்சராக முடிவெடுத்து விட்டார்கள்.

விஜய் ரசிகர்களுக்கெல்லாம் இன்னும் 18 வயசு கூட ஆகலையே இது என்னடா வம்பா போச்சு என ஒரு பக்கம் நெட்டிசன்கள் இப்பவே கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் விஜய் நடித்த வசீகரா, குஷி, சச்சின் போன்ற பல படங்களை 100 முறைக்கு மேல் பார்த்தும் சலிக்காத 90ஸ் கிட்ஸ்களுக்குத் தான் இது கொடுமையான காலம். விஜய் இல்லாத சினிமா எப்படி இருக்கும் என்பதை கற்பனை பண்ணி கூட பார்க்க யாரும் தயாராக இல்லை.

ஆனால் தலைவன், சினிமாவில் வசனம் பேசியது போதும் இனி சட்டமன்றத்தில் தான் குரல் கொடுப்பேன் என களத்துக்கு போக ரெடியாகிவிட்டார்.

விஜய் கிட்டத்தட்ட முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும், ஆந்திராவின் முன்னாள் அமைச்சர் என் டி ஆர் அரசியலைத்தான் பின்பற்றுகிறார். இவர்கள் இருவருமே அரசியலுக்கு வர போகிறோம் என்ற முடிவை எடுத்த பிறகு நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தங்களுடைய படங்களில் பேச ஆரம்பித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

விஜய் ஆரம்ப காலகட்டத்தில் அரசியலை நகைச்சுவை காட்சிகளில் பயன்படுத்திக் கொண்டிருந்தார். பின்னர் தலைவா படத்திற்கு பிறகு மொத்தமாக அரசியல்வாதிகளுக்கு எதிராக களமிறங்க ஆரம்பித்தார்.

ஆனால் இதில் என்ன வித்தியாசம் என்றால் எம்ஜிஆர் கூட கட்சி ஆரம்பித்து ஒரு சில படங்களுக்கு பிறகு தான் சினிமாவை விட்டு விலகினார். ஆனால் விஜய் கட்சி ஆரம்பித்த அறிவிப்பு கூடவே சினிமா விட்டு விலகப் போவதையும் அறிவித்து விட்டார்.

இதனால்தான் அவருடைய கடைசி படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. 30 ஆண்டுகால தமிழ் சினிமாவை ஆட்சி செய்த முடி சூடா மன்னன் சினிமாவுக்கு குட் பை சொல்லும் போது எந்த மாதிரி படத்தை கொடுப்பார் என்பது தான் இப்போதைய பெரிய எதிர்பார்ப்பு.

ஸ்கெட்ச் போட்ட தளபதி

படத்திற்கு இயக்குனர் என பல பேரின் தலை உருண்டது. கடைசியில் இப்போதைக்கு நடிகர் அஜித்குமாரின் ஆஸ்தான இயக்குனர் ஹெச் வினோத் தான் தளபதி 69 படத்தை இயக்கப் போவதாக ஓரளவுக்கு உறுதியாக இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் வினோத் ஏற்கனவே கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தனக்கு விஜய் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், அப்படி ஒரு படம் பண்ணினால் அது முழுக்க முழுக்க அரசியல் களம் சார்ந்ததாக இருக்கும் எனவும் வினோத் சொல்லி இருக்கிறார்.

பழம் நன்றாக பழுத்து மடியில் விழுந்த கதையாக இப்போது விஜயின் கடைசி படத்தை வரி இயக்க இருக்கிறார். இதனால் விஜய் கண்டிப்பாக ஒரு அரசியல் படத்தை தான் தன்னுடைய கடைசி படமாக கொடுக்க இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment