அமெரிக்காவில் அசால்ட் பண்ணும் தனுஷ்.. பாராட்டி பேசிய ஹாலிவுட் பிரபலங்கள்

ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கிரே மேன் படத்தில் தனுஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நெட்ப்ளிக்ஸ் தயாரித்துள்ள இப்படம் அமெரிக்காவில் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் தடபுடலாக நடந்து வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு தனுஷ் பங்கு பெற்றார். அங்கு ரசிகர்களின் கேள்விக்கு நகைச்சுவையாக பதில் அளித்திருந்தார். அவருடைய பதில் அரங்கத்தையே சிரிப்பலை ஏற்படுத்தியது.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற பிரீமியர் ஷோவில் தனது மகன்களுடன் தனுஷ் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து ஹாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளனர். அவர்கள் தனுஷை பற்றி புகழ்ந்து பேசி உள்ளனர். கிரிஸ் எவன்ஸ் மற்றும் ஆனா டி அமர்ஸ் ஆகியோர் தனுஷை பற்றி கூறியுள்ளனர்.

அதாவது தனுஷ் சண்டை காட்சிக்கான பயிற்சிகள் பல நேரம் எடுத்துக்கொண்டார். அதில் அவ்வளவு பொறுமையாக தனது கடின உழைப்பை போட்டார். பல வாரங்கள் இதற்காக மெனகெட்டாலும் தனுஷ் இதில் எந்த ஒரு அதிருப்தியும் வெளிப்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

மேலும் தனுஷ் தனது வேலைகள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல் கம்பீரமானவர். அவருடன் இணைந்து பணியாற்றியது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக கிரிஸ் எவன்ஸ் கூறியுள்ளார். இவ்வாறு தனுஷை பற்றி ஹாலிவுட் நட்சத்திரங்கள் புகழ்ந்து பேசியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதுகளை வாங்கியுள்ள தனுஷ் தற்போது அமெரிக்காவிலும் அசால்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார். மேலும் தொடர்ந்து இது போன்ற ஹாலிவுட் பட வாய்ப்புகள் தனுஷுக்கு வந்து குவிய உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →