தேசிய விருதுக்கு தயாராகும் தனுஷ்.. இந்த வார ஹிட் லிஸ்டில் குபேரா இருக்குமா.?

சேகர் கம்புல்லா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தானா, நாகார்ஜுனா போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ள குபேரா இன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்து பட்டையை கிளப்பி வருகிறது. முதல் பாதி முடிந்தபின் வந்த விமர்சனத்தில் கண்டிப்பாக தனுஷ்-க்கு தேசிய விருது கிடைக்கும் என்பது போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

தனுஷ் 2வது முறையாக தெலுகு இயக்குனருடன் கூட்டணி போட்டுள்ள இந்த படத்திற்கு இரண்டு பக்கமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதைக்களம், திரைக்கதை & காட்சிகள் படத்தை சுவாரஸ்யமாக்கியது.

ரேஸி முதல் பாதியைத் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட இரண்டாம் பாதி கதைக்களத்தில் மிரட்டிவிட்டார் சேகர் கம்புல்லா. மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார் தனுஷ் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.

படத்தின் நீளத்தை சற்று குறைத்து இருக்கலாம் அதேபோல ஒரு சில காட்சிகளை நாம் இறுதி வரை எளிதாக கணித்து விட முடிகிறது. இதுதான் படத்தின் ட்ராபேக் என்று கூறுகின்றனர். நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா இருவரின் கதாபாத்திரங்களும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டன, அவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்.

டிஎஸ்பியின் பின்னணி இசை அதுவும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் இரட்டிப்பு மடங்கு உயிர் கொடுத்து உள்ளது. இன்று ஒரு மணி நேரத்தில் புக் மை ஷோவில் 94 ஆயிரம் டிக்கெட்டுகள் booking செய்துள்ளனர். தற்போது நல்ல விமர்சனங்கள் வருவதால் இந்த சனி மற்றும் ஞாயிறு ரசிகர்கள் கொண்டாட வேண்டியதுதான்.

மொத்தமாக சேகர் கம்புல்லா அடுத்த ஒரு எமோஷனலான பொழுதுபோக்கு படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இது இந்த வாரம் பார்ப்பதற்கு தகுதியான படம் தான். தனுஷ் ரசிகர்களை தாண்டி எல்லா ரசிகர்களும் குடும்பத்துடன் சென்று இந்த படத்தை பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →