மெடிக்கல் கிரைம் திரில்லரில் மிரட்டும் அதர்வா.. டிஎன்ஏ டிரைலர் எப்படி இருக்கு.?

Atharvaa : அதர்வா எப்படியாவது ஹிட் லிஸ்டில் உள்ள நடிகர்களின் பெயர்களில் இடம்பெற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். அப்படி வித்தியாசமாக அவர் தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் படம் தான் டிஎன்ஏ.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் இந்த படத்தை தயாரித்து உள்ள நிலையில் இப்போது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.

அதாவது இரு குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட அதர்வா மற்றும் நிமிஷா இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தையை சுற்றி தான் கதை வேகம் எடுக்கிறது. அதாவது மெடிக்கலில் நடக்கும் கிரைம் திரில்லரை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதர்வாவின் டிஎன்ஏ டிரைலர் எப்படி இருக்கு

நிமிஷா குடும்பம் என அனைவருமே மருத்துவர்கள் பக்கம் நிற்க அதர்வா மட்டும் தனது மனைவிக்காக நடந்த உண்மைகளை தேட முயற்சிக்கிறார். கடைசியில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடித்தாரா என்று விறுவிறுப்பான கதைக்களத்துடன் டிஎன்ஏ படம் அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் இதற்கு முன்னதாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதர்வா இந்த படத்தில் தனது கடின உழைப்பை போட்டிருக்கிறார் என்பது ட்ரைலரை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது.

மேலும் இந்த படம் அதர்வாவுக்கு ஒரு நல்ல கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்திலும் அதர்வா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →