ஏதே.. மொத்தமா பாடை கட்டிவிடுவார்கள் போலையே.. ஓவராக கூவிய சித்தார்த்

நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக கமல் ஹாசன், இந்தியனாக கொடுத்த குரல் தமிழக மக்களிடம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்தியன் 2 படமோ, ட்ரோல் மெட்டீரியல் ஆனது. இந்தியன் 2 செய்த சம்பவத்தால் இந்தியன் 3 படமே இன்னும் ரிலீஸாகாமல் இருக்கும் நிலையில் நடிகர் ஒருவர் இந்தியன் 4 படத்தில் நடிப்பதற்காக காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார் ஒரு நடிகர்.

இதை தற்போது நெட்டிசன்கள் வைரல் செய்து கிண்டல் செய்தும் வருகின்றனர். சுமார் 5 ஆண்டுகளாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இரண்டாம் பாகத்தினுடன் சேர்த்து இந்தியன் 3 படத்தையும் ஒன்றாக எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்தப் படத்தில் கமல் ஹாசன், நெடுமுடி வேணு மட்டுமின்றி, சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திர கனி, தம்பி ராமையா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், நண்டு ஜெகன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்ததால் நிச்சயம் ஏதேனும் சம்பவம் இருக்கும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் இவர்களை இவ்வளவு காசு கொடுத்து நடிக்க வைத்ததற்கு பதிலாக, குழந்தைகளையே நடிக்க வைத்திருக்கலாம். ஏன் என்றால் குழந்தைகள் போல சிறுபிள்ளைத்தனமாக நடித்துக்கொண்டிருந்தார்கள். அதுவும் சித்தார்த் சித்ரா அரவிந்தன் பிரம் சோசியல் மீடியா என்று சொல்லும்போதெல்லாம் குபீர் சிரிப்பு வந்துவிட்டது.

இந்தியன் 4 படத்தில் நடிக்க வேண்டுமாம்..

இந்தியன் 2 படம் வெளியாவதற்கு முன்பு, படக்குழு படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் இறங்கி இருந்த சமயத்தில் நடிகர் சித்தார்த் பேசிய வார்த்தைகளை தற்போது சிலர் வைரலாக்கி வருகின்றனர். அப்படி ஒரு நேர்காணலில், அந்த வீடியோவில், நடிகர் சித்தார்த்திடம் இந்தியன் 2, இந்தியன் 3 இந்த 2 படங்களில் எந்தப் படம் உங்களுக்கு பிடித்தமானது என கேள்வி எழுப்பப்பட்டிருக்கும்.

இதற்கு சிறிதும் யோசிக்காமல் சித்தார்த் எனக்கு இந்தியன் 2வும் இல்லை இந்தியன் 3யும் இல்லை. எனக்கு மிகப் பிடித்தப் படம் என்றால் அது இந்தியன் 4 தான் பிடிக்கும். இந்தப் பாயாசத்தை எனக்கு ருசி காட்டி வைத்துள்ளனர். அதனால் இந்தியன் 4 வர வேண்டும். அந்தப் படத்திலும் நான் நடித்து பாயாசத்தின் ருசி காண வேண்டும் என அவர் கூறியிருப்பார்.

இதை பார்த்த ரசிகர்கள் “முதலில் இவருக்கு ஒரு பாயசத்தை போடுங்க டா.. ” என்று கேலி செய்து வருகின்றனர். இதனால் தான் கொடுத்த அட்வான்ஸ் க்கு மட்டும் perform பண்ண வேண்டும்.. ஓவராக செய்தால் இப்படி தான் மக்கள் செஞ்சு விட்டு போய்விடுவார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment