வடிவேலுவை அப்பவே சோலி முடிச்சிருப்பேன்.. எனக்கு மூணு பொம்பள புள்ளைங்க, கடுமையாக விமர்சித்த நடிகர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அவர்கள் மற்ற நடிகர்களை கலாய்ப்பது, வயிறு குலுங்க சிரிக்க வைப்பது, அவர்களது காமெடியான ஆக்ஷன் காட்சிகள் இவை அனைத்துமே ரசிகர்களை கவரும். அன்றைய நடிகர் நாகேஷ் முதல் இன்றைய யோகிபாபு வரை திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர்களை கட்டாயம் இயக்குனர்கள் வைத்து விடுவார்கள்.

அப்படி பல காமெடிகளை செய்து, இன்று மீம்ஸ்களின் மன்னனாக வலம் வரும் வடிவேலு அவர்களை கொலை செய்யும் அளவிற்கு பிரபல நகைச்சுவை நடிகர் முற்பட்டுள்ளார். நடிகர் வடிவேலு, இயக்குனர் ராஜ்கிரண் இயக்கி நடித்த என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர். அந்த படத்தை தொடர்ந்து, பல படங்களில் தொடர்ச்சியாக தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி நடித்து வந்தார் வடிவேலு.

அந்த வகையில், இயக்குனர் ராஜ்கிரண் அலுவலகத்தில் பணிபுரிந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் தான் நடிகர் சிசர் மனோகர். இவர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில், வடிவேலுவால் தனது சினிமா வாய்ப்புகள் பறிப்போனதாக கூறியுள்ளார்.அப்போது பேசிய அவர்,ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் வடிவேலு நடித்த போது கவுண்டமணி எதிர்த்ததாக கூறிய அவர், அப்போது நான், தான் வடிவேலுவுக்கு தைரியம் கொடுத்ததாக கூறினார்.

மேலும் வடிவேலு எனக்கு வரும் கதாபாத்திரங்களையெல்லாம் தட்டி பறித்துக்கொண்டதாக தெரிவித்த சிசர் மனோகர், இயக்குனர் சிங்கம்புலி இயக்கத்தில் உருவான 23ஆம் புலிகேசி படத்தில் இளவரசன் கதாபாத்திரத்தில் முதன் முதலில் தான் நடிக்க வேண்டியது என தெரிவித்தார். மேலும் அப்படத்தில் என்னை இளவரசராக நடிக்க விடாமல், ஒரே ஒரு காமெடி காட்சியில் மட்டும் பயன்படுத்திவிட்டு, அப்படத்தில் சிறையில் அடைத்து விட்டார் வடிவேலு என தெரிவித்தார்.

ஆரம்பத்தில் வடிவேலுவுக்கு உறுதுணையாக இருந்த என்னை, வடிவேலு வளர்ந்த பின் தன்னை கண்டுக்கொள்ளவே இல்லை என வேதனை தெரிவித்தார். மேலும் தனக்கு வந்த கோபத்திற்கு வடிவேலுவை தீர்த்து கட்டலாம் என நினைத்தாராம் சிசர் மனோகர். ஆனால் அச்சமயத்தில் இயக்குனர், நடிகர் மற்றும் அரசியல்வாதியான சீமான் தன்னை ஆறுதல்படுத்தியதாக கூறினார்.

அதுமட்டுமில்லை தனக்கு மூன்று பெண் பிள்ளைகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இன்று வடிவேலு உயிரோடு இருந்திருக்க மாட்டார் என சிசர் மனோகர் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் வடிவேலு ரீ என்டரி கொடுத்து படங்களில் நடித்து வரும் நிலையில், வடிவேலுவுடன் இணைந்து நடித்த நடிகர்கள் பட வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டனர். அந்த வகையில் சிசர் மனோகர் வடிவேலு மீது இருந்த கோபத்தை பற்றி பேசியது வைரலாகியுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →