தயாரிப்பாளர்களை கதறவிடும் சந்தானத்தின் வசூல் சாதனை.. அடி மட்டத்திற்கு சென்ற வியாபாரம்

சந்தானம் யார் பேச்சையோ கேட்டுக்கொண்டு காமெடி கதாபாத்திரங்களை தவிர்த்து விட்டு நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பித்து வருகிறார். ஆரம்பத்தில் முழுக்க முழுக்க காமெடி படங்களை தேர்ந்தெடுத்து அதில் ஹீரோவாக சந்தானம் நடித்து வந்தார். அந்தப் படங்களுக்கு ஓரளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் சமீபகாலமாக காமெடியை கைவிட்டு விட்ட ஆக்சன் ஹீரோவாகமாற சந்தானம் போராடி வருகிறார். அதன் விளைவு தான் படம் படுமோசமான தோல்வியை அடைந்து வருகிறது. சமீபத்தில் சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் சாதாரணமாக காமெடி வரும் காட்சிகளில் கூட நகைச்சுவையை இயக்குனர் தவிர்த்து விட்டார். இந்த படம் வந்ததே ரசிகர்களுக்கு தெரியாத அளவிற்கு ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் போட்ட லாபத்தையே எடுக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் திணறி வருகிறார்கள்.

அந்த வகையில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தை கேரளாவில் விநியோகஸ்தர் ஒருவர் 50,000 கொடுத்த வங்கி உள்ளார். ஆனால் அங்கு படம் 30 ஆயிரம் மட்டுமே வசூல் செய்துள்ளது. இதைப் பற்றி இன்னொரு விநியோகஸ்தரிடம் இவர் இவ்வாறு சொல்லி கவலைப்பட்டுள்ளார்.

அதற்கு அந்த விநியோகஸ்தர் இதுவாவது பரவாயில்லை என்று தலையில் அடித்துக் கொண்டு குலுகுலு படம் கேரளாவில் வெறும் 20000 மட்டும்தான் வசூல் செய்தது என்று கூறியுள்ளார். இவ்வாறு சந்தானம் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்து வருகிறார்கள்.

இதற்கு மேலும் சந்தானம் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம்பிடித்தால் தயாரிப்பாளர்கள் தற்கொலை தான் செய்ய வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். ஏனென்றால் தயாரிப்பாளர்களே வட்டிக்கு வாங்கி தான் படத்தை தயாரிக்கிறார்கள். இப்படி தொடர்ந்து நஷ்டம் தரும் படங்களை சந்தானம் கொடுத்தால் வேறு என்னதான் அவர்கள் செய்வார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →