சிவகார்த்திகேயன் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் சூழ்நிலையில் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பிரின்ஸ் படம் தீபாவளி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்திற்கு போட்டியாக கார்த்தியின் சர்தார் படமும் வெளியாகும். இந்தப் படத்தில் கார்த்தி பல கெட்டப்புகளில் அசத்தியுள்ளார். மேலும் கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் சர்தார் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.
தற்போது சர்தார் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயின்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை மதுரை அன்பு வாங்கி இருக்கிறார். இந்த சூழலில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஒரு செய்தி போய் உள்ளது.
அதாவது நீங்கள் பிரின்ஸ் படத்திற்கு அதிக திரையரங்குகள் கொடுக்கக் கூடாது என்று சொல்லி உள்ளனராம். ஏனென்றால் பிரின்ஸ் படம் அதிக திரையரங்குகளில் வெளியிட்டால் சர்தார் படத்தின் வசூல் பாதிக்கும். இதனால் தியேட்டர் உரிமையாளர்களிடம் பிரின்ஸ் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியானால் அடுத்து வரும் பெரிய படங்களுக்கான வாய்ப்பு உங்களுக்கு மறுக்கப்படும் என்று தகவல் போய் உள்ளது.
இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது கலக்கத்தில் உள்ளனராம். மேலும் தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் கைப்பற்றி வருகிறது. டாப் நடிகர்களின் படங்களையும் இவர்கள்தான் கைப்பற்றி வருகிறார்கள்.
இவர்களைப் பகைத்துக் கொண்டு நாம் எதுவும் செய்ய முடியாது என்ற யோசனைகள் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளார்கள். சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஒரு பக்கம் கடன் பிரச்சனை இருந்து வரும் நிலையில் இப்படி ஒரு பிரச்சினையா என நாலா பக்கமும் சிக்கலில் மாட்டி தவிக்கிறார்.