எங்க உழைப்பை சாகடிப்பது விமர்சனமா? ப்ளூ சட்டை மாறனை வச்சு செய்யும் இயக்குனர்

பெரும்பாலான ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்த்து விட்டு தான் திரையரங்குகளில் படத்தை பார்க்க செல்கிறார்கள். ஆனால் சில நல்ல படங்களையும் ப்ளூ சட்டை மாறன் மிக மோசமாக விமர்சிப்பதால் படத்தின் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை ஆகா ஓகோ என்று முதல் ஐந்து நிமிடம் பாராட்டு இருந்தார். ஆனால் இந்த விமர்சனம் படத்தை முட்டுக்கொடுக்கும் முட்டு பாய்ஸ்க்கு என அந்தர்பல்டி அடித்தார்.

தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பொன்னியின் செல்வன் படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருந்தார். இவரது யூடியூப் சேனலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் பேரரசு தற்போது ப்ளூ சட்டை மாறனை விமர்சித்துள்ளார்.

அதாவது ப்ளூ சட்டை மாறன் ஆன்ட்டி இந்தியன் என்ற படத்தை எடுத்தார். அதில் இரண்டாம், மூன்றாம் பாகத்தை எடுக்க வேண்டியது தானே. ஒரு வெற்றி படத்தை கூட கொடுக்க முடியாத உனக்கெல்லாம் மற்ற படத்தை பற்றி விமர்சிக்க தகுதியே கிடையாது. ஒரு படத்தை விமர்சிப்பது நாகரீகமாக இருக்க வேண்டும்.

அதாவது படத்தில் தவறு இருந்து, அதை நாகரிகமாக சொன்னால் மீண்டும் அந்த தவறு வராமல் இயக்குனர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதை விட்டுவிட்டு விமர்சிப்பது என்ற பெயரில் எங்களின் உழைப்பை ப்ளூ சட்டை மாறன் சாகடிப்பதாக என்று பேரரசு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

மேலும் ப்ளூ சட்டை மாறன் படங்களை விமர்சனம் செய்வது கொலைக்கு சமம், டாப் நடிகர்களை பற்றி மோசமாக பேசினால் இவரது யூடியூப் சேனலை நிறைய பேர் பார்ப்பார்கள் என்பதற்காக இவ்வாறு விமர்சனம் செய்து வருகிறார் என பேரரசு கூறியுள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →