மனைவியால் நொந்துபோனரா செல்வராகவன்? சர்ச்சைக்குள்ளான பதிவிற்கு இதுதான் காரணம்.!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் என்று தற்போது உள்ளவர்கள் ஒரு சிலர் இன்னொருவரின் உதவியால் மட்டுமே சினிமாவில் அறிமுகமாகி நடிக்க வந்திருப்பார்கள். அதில் முக்கியமாக தனுஷ் படிக்கும் பொழுதுநடிப்பு பிடிக்காமல் தன் அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் வற்புறுத்தலுக்கு இணங்கி நடிக்க வந்தார்.

பின்னர் சில ஒரு படத்தில் மட்டும் நடித்து கதாநாயகன் அந்தஸ்தை பெற்று தற்போது மிகப்பெரிய இடத்தில் இருந்து வருகிறார். ஆனால் ட்விட்டரில் புகைப்படங்கள் போடும்போது மட்டும் தான் குடும்பம், தன் அம்மா, அப்பா அண்ணன் என்று விதவிதமாக புகைப்படத்தை எடுத்து போட்டு வரும் தனுஷ் தற்போது அவரது செயல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

செல்வராகவனுக்கு பல வருடங்களாகவே வெற்றிப் படங்கள் எதுவும் இல்லை. அதேபோல் ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்து அதில் கடனில் மாட்டிக்கொண்டார். அதை தற்போது வரை அடைத்து வருகிறார் என்ற செய்தி வந்துள்ளது. அதனால் படம் இல்லாததால் நடித்து சில கடன்களை அடைக்கலாம் என்று நடித்து வருகிறார்.

எதற்காக இந்த அவல நிலை தனுஷ் எவ்வளவு பெரிய நடிகர் அவர் வாங்கும் சம்பளத்தில் அவர் நினைத்தால் அண்ணனின் கடனை ஒரு நொடிப்பொழுதில் அடைத்து இருக்கலாம் ஆனால் அது செய்யவில்லை. அதனால் விரக்தியில் உள்ள செல்வராகவன் திடீரென ட்விட்டரில் தனியாக பிறந்தோம் தனியாக வந்தோம் எதற்காக இடையில் துணை, துணை என்பது கானல் நீர் மாதிரி அதனால் தனியாகவே வாழ்வோம், தனியாகவே போவோம் என கூறியிருக்கிறார்.

இது அவரது மனைவியைப் பற்றி கூறியது என பல்வேறு கருத்துக்கள் வெளிவந்தன ஆனால் தன்னுடன் தம்பி பிறந்ததை மறந்து தனியாக பிறந்தோம் என கூறியிருப்பது அவரது கோபத்தின் வெளிப்பாடு என பலர் கூறுகின்றனர். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற பழமொழி இவருக்கு பொய்யாக மாறியது தான் வளர்த்த தம்பி தன்னை கண்டு கொள்வதே இல்லை என்பது தான் உண்மை.

தனுஷ் வளர்ச்சியடைந்து சில வருடங்கள் இவரது நடவடிக்கைகள் மாறி இருக்கிறது அதன் அடிப்படையில் அவருக்கு விவாகரத்தும் நடைபெற்றது. தற்பொழுது தன்னை உருவாக்கிய அப்பா, அண்ணன் இவர்களையும் கண்டுகொள்வதில்லை வீட்டுக்கு வருவதில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த செல்வராகவன் விரக்தியில் இப்படி பேசி வருவது வருந்தத்தக்கது கூடிய விரைவில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து பழைய நிலையை அடையவேண்டும் என சினிமாவில் உள்ள பிரபலங்கள் பேசிவருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →