தனுஷ் பாணியை பின்பற்றும் அனிருத்.. கல்யாண விஷயத்தில் உருட்டு

Anirudh : தனுஷால் சினிமாவில் நுழைந்தவர் தான் இசையமைப்பாளர் அனிருத். இவரைப் பற்றி சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பல கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது. அதாவது சன்ரைஸ் ஹைதராபாத்தில் உரிமையாளரான காவியா மாறன் மற்றும் அனிருத் இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

அதுவும் அனிருத்தின் மாமாவான ரஜினிகாந்த் காவியாவின் தந்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படங்களில் நடித்து வருகிறார். மேலும் அனிருத் மற்றும் காவியா இருவரும் சென்னை போன்ற நட்சத்திர உணவகங்களை ஒன்றாக பார்த்ததாக செய்திகளும் வெளியாகி வந்தது.

இந்த சூழலில் விரைவில் இருவருக்கும் திருமணமாக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தன்னுடைய திருமணம் குறித்து வதந்திகள் பரவி வருவதாக அனிருத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அப்படி என்றால் காவியா மாறன், அனிருத் திருமணம் வதந்தியா என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

கல்யாண விஷயத்தில் அனிருத் கூறுவது உண்மையா?

ஆனால் இதுகுறித்து சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் பேசியிருக்கிறார். அதாவது இதுபோன்ற திருமண செய்தி குறித்து மறுத்தவர்கள் பலர் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணத்திற்கு முன்பு இதே போல்தான் செய்தி வெளியானது.

ஆனால் தனுஷ் மறுத்த நிலையில் நான்கு மாதம் கழித்து ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் தேவயானி, ராஜ்குமார் திருமண விஷயத்திலும் இதே தான். திருமணத்திற்கு முதல் நாள் வரை இந்த விஷயம் பொய் என்று சொன்னார்.

மறுநாளே இவர்களது திருமணம் நடைபெற்றது. அப்படிதான் அனிருத்தும் இவ்வாறு மறுக்கிறார். அவரது ரசிகர்களுக்கே இது நல்ல சம்பந்தம் தான், இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. இதுதான் கல்யாணத்திற்கு சரியான வயது என்றும் அந்தணன் கூறியிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →