வேல்ஸ் கல்வி நிறுவனத்தின் CEO ஐசரி கணேஷ். 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நம்பத்தகுந்த ஒரு தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எல் கே ஜி, மூக்குத்தி அம்மன், கோமாளி போன்ற படங்களை தயாரித்து வெற்றி கண்டார்.
இப்போது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார். 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த படத்திற்குப் பிறகு இவர் தயாரித்த எந்த படங்களும் வெற்றி படங்களாக அமையவில்லை. ஜோசுவா, அகத்தியா, சுமோ, பி டி சார் என எல்லா படங்களும் காலை வாரியது.
சமீபத்தில் இவர் தயாரித்த படங்களான அகத்தியா மற்றும் சுமோ இரண்டிலும் சேர்த்து கிட்டத்தட்ட 60 கோடிகளுக்கு மேல் நஷ்டம் அடைந்துள்ளார். சமீபத்தில் பா விஜய் இயக்கிய அந்த படம் பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. தளராமல் இப்பொழுதும் அவர் 3 படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
ஐசரி கணேஷ் தற்போது ஜெயம் ரவியை வைத்து ஜீனி என்ற படத்தை 100 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். ஜெயம் ரவி படங்களில் இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவான படம். இருவரும் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். ஜீனி என்பதன் விரிவாக்கம் ஜீனியஸ். இதைத்தான் சுருக்கி இப்படி வைத்துள்ளனர்.
எந்த படமும் கைகொடுக்கவில்லை என தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு ஜீனி படத்தை போட்டு காண்பித்து Suggestion கேட்டுள்ளார் ஐசரி கணேஷ். பார்த்தவர்கள் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் நல்லா இல்லை என்று வெளிப்படையாக கூறிவிட்டனராம்.
பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் முழித்துக் கொண்டிருக்கிறார் ஐசரி கணேஷ். இப்பொழுது 50 நாட்கள் இந்த படத்தை ரீசூட் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம். இதனால் ஜெயம் ரவியிடம் இரண்டு கண்டிஷன்கள் போட்டுள்ளார். ரீசூட் அல்லது ஸ்கிராப் என தலையில் டைம்பாம் வைத்துள்ளார்.