ஐசரி கணேஷ் பிடியில் 10 இயக்குனர்கள்.. பிரம்மாண்ட திட்டத்தில் கைகோர்க்கும் தனுஷ், இத்தனை படங்களா.!

Vels Film International-Dhanush: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் ஐசரி கணேஷ் பல தரமான படங்களை கொடுத்துள்ளார். தற்போது கூட அவர் தயாரிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகிறது.

ஆனால் 2025-2027ல் இந்த நிறுவனம் தயாரிக்கப் போகும் 10 படங்களின் லிஸ்ட் பிரமாண்டமாக இருக்கிறது. பல கோடி பொருட்செலவில் ஒவ்வொரு படத்தையும் தயாரிக்க இருக்கிறார் ஐசரி கணேஷ்.

அது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் சுந்தர் சி, கௌதம் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம்குமார், ஜூட் ஆண்டனி ஜோசப், அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் ராஜா, செல்லா அய்யாவு, கணேஷ் பாபு ஆகியோர் தான் அந்த பத்து இயக்குனர்கள்.

இதில் தனுஷ் மட்டும் மூன்று படங்களில் நடிக்க இருக்கிறார். அதன்படி இவர் வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் வடசென்னை 2 அடுத்த வருட இறுதியில் தொடங்க இருக்கிறது.

பிரம்மாண்ட திட்டத்தில் கைகோர்க்கும் தனுஷ்

ஆனால் அதற்கு முன்பே போர்த் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் தொடங்க இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்கும் என்கின்றனர்.

அடுத்ததாக மாரி செல்வராஜ் உடன் தனுஷ் கர்ணன் படத்திற்கு பிறகு இணைய இருக்கிறார். அந்த படம் 2026ல் தொடங்க இருக்கிறது. இப்படியாக ஹிட் இயக்குனர்களுடன் இணைகிறார் தனுஷ்.

இது தவிர மற்ற ஏழு படங்களில் எதிர்பாராத டாப் ஹீரோக்கள் நடிக்க இருக்கின்றனர். அது தொடர்பான அறிவிப்பு அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. ஆக மொத்தம் பல கோடி வசூலுக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறது வேல்ஸ் நிறுவனம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →