தினேஷ் உடன் மீண்டும் சேர வாய்ப்பில்லை.. இரண்டாம் திருமணத்திற்கு தயாரான ரச்சிதா

Dinesh –  Rachitha : விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. மேலும் விஜய் டிவியில் நிறைய தொடர்களில் நடித்து வந்த ரச்சிதா தன்னுடன் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களிலேயே இவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். முதல் காதல் திருமணம் தோல்வியை சந்தித்ததால் மிகுந்த மன கஷ்டத்தில் சில வருடங்கள் இருந்ததாக ரச்சிதா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இப்போது அதில் இருந்து வெளிவந்த சின்னத்திரை தொடர்கள் மற்றும் கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்ட போது அவருக்கு ஆதரவாக தினேஷ் ஊடகங்களில் பேசி வந்தார். இதனால் மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ரச்சிதா தினேஷுடன் சேர விருப்பம் இல்லாமல் இருந்தார்.

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் பங்கு பெற்றிருந்தார். அப்போதும் கூட ரச்சிதா மீது தினேஷ் அன்பு காட்டிய போதும் அவர் அதை ஏற்க விருப்பமில்லாமல் இருந்தார். இந்த சூழலில் இப்போது விரைவில் ரச்சிதாவுக்கு இரண்டாம் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே கன்னட இயக்குனர் ஒருவரை ரச்சிதா காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இப்போது அவரை தான் ரச்சிதா திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் தனது இரண்டாவது திருமணத்தை பற்றி ரச்சிதா இன்னும் எதுவும் வெளிப்படையாக கூறவில்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →