அவங்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுத்தது தப்பு விஜய்.. வாரிசு பட நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இதுதான் காரணம்

நேற்று முதலே சோசியல் மீடியா ரணகளமாக போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் விஜய் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் இருக்கின்றனர். ஏனென்றால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு திரைப்படத்தைப் பற்றி பலரும் மோசமான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இது திரையுலக வட்டாரத்தையே பேரதிர்ச்சியாக்கி இருக்கிறது.

பொதுவாக ஒரு முன்னணி நடிகர் தான் நடிக்கும் படத்தை தேர்ந்தெடுக்கும் போது எந்த அளவுக்கு கவனமாக இருப்பார் என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஏனென்றால் இது அந்த நடிகரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவினரையும் பாதிக்கும். அப்படி இருக்கும் போது மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் விஜய் எதையும் தீர ஆராய்ந்து யோசிக்காமலா இந்த படத்தில் நடிக்க சம்மதித்திருப்பார்.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் பேசாமல் ஒரே வார்த்தையில் படம் மொக்கை என்றும் மெகா சீரியல் என்றும் கழுவி ஊற்றுவது எந்த விதத்தில் நியாயம். படத்தை பார்த்துவிட்டு நேர்மையான விமர்சனத்தை கொடுங்கள் என விஜய் ரசிகர்கள் இப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதான் தற்போது சினிமா ரசிகர்களின் எண்ணமாகவும் இருக்கிறது.

ஏனென்றால் நேற்று படத்தை பார்த்த குடும்ப ஆடியன்ஸ் அனைவரும் இப்படத்தை தரமான படம் என்றும் விஜய் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசத்தை கொடுத்திருக்கிறார் என்றும் புகழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாரிசு படத்திற்கு இப்படி ஒரு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதற்கு பின்னால் சில காரணங்களும் இருக்கிறது.

அதாவது இந்த படத்தின் இயக்குனர் வம்சி தெலுங்கு திரை உலகில் பிரபலமானவர். அதேபோன்று அங்கு மிகப்பெரும் ஆளுமையுடன் இருப்பவர்தான் தில் ராஜு. அதனாலயே இப்படி ஒரு வாய்ப்பை விஜய் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். அதிலும் முக்கியமாக அவர்கள் தரமான படத்தை தான் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்திருக்கிறது.

இப்படித்தான் வாரிசு திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சிலருக்கு ஆரம்பத்திலேயே தெலுங்கு பிரபலங்கள் இங்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விடக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறது. ஏனென்றால் விஜய்க்கு அடுத்தபடியாக தில் ராஜூ முன்னணி நடிகர் ஒருவரை வைத்து படம் எடுக்க முயற்சி செய்து வருகிறார். தற்போது பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருக்கும் அந்த நடிகரும் கிட்டத்தட்ட தில் ராஜு தயாரிப்பில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இப்படி அடுத்தடுத்து அவர் தமிழ் நடிகர்களை வைத்து படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இது தொடரக்கூடாது என்ற காரணங்களால் தான் இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருவதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் வாரிசு படம் அத்தனை விமர்சனங்களையும் உடைத்து எறிந்து மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது குடும்பங்கள் கொண்டாடும் தரமான திரைப்படம் என்ற சர்ட்டிபிகேட்டையும் இந்த படம் பெற்றுள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →