ரசிகர்கள் தான் எப்பொழுதும் அடித்துக் கொள்வார்கள்.. இப்ப விஜய், அஜித் தயாரிப்பாளர்களே அடித்துக் கொள்கிறார்கள்.!

மூன்று மாதமாக தொடர்ந்து வாரிசு, துணிவு என்ற செய்தி மட்டுமே வருகின்றன, படம் வெளிவந்த பிறகும் இதே நிலை நீடிக்கிறது. ட்விட்டர், பேஸ்புக், இதை திறந்தாலும் ரசிகர்களின் சண்டை நீயா நானா என்று மிக மோசமாக நடந்து வருகின்றன. இது முக்கியமாக தற்பொழுது தயாரிப்பாளர்களும் இறங்கி சண்டை போட்டு வருகின்றனர்.

வாரிசு பட தயாரிப்பாளர் விஜய் சொல்லும் டயலாக் சொல்லி நாங்கள் தான் வின்னர் என்று சொல்கிறார்கள். துணிவு பட தயாரிப்பாளர்கள் அவர்கள் ஸ்டைலில் நாங்கள்தான் ரியல் வின்னர் என்று கூறி வருகிறார்கள். இது இப்படியே போனால் நிலைமை மோசமாகிவிடும்.

இதற்கு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டு யார் உண்மையான வசூல் என்று கூறி இதற்கு முடிவு செய்ய வேண்டும் என்று பிரபலங்கள் கூறி வருகின்றனர். இப்படி சமூக வலைதளங்களை வலைதளங்களில் எழும் சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தயாரிப்பாளர்களே எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுகின்றனர்.

மேலும் தமிழ்நாட்டில் அஜித் விஜய் இரண்டு படங்களுக்கும் முக்கியமான திரையரங்கம் என்று கருதப்படுவது சென்னை ரோகிணி தியேட்டர். இந்த திரையரங்கில் இந்த இரு நடிகர்களுக்கும் உள்ள வசூலை சுலபமாக கணக்கிட்டு சொல்லுவார்கள் இதை வைத்து ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள்.

படம் ரிலீஸ் ஆன ஒரு வார இடைவெளியில் எப்பொழுதும் சொல்லும் ரோகினி தியேட்டர் கருத்துக்கணிப்பு இப்பொழுது இன்று வெளியாகி இருக்கிறது. ரோகிணி தியேட்டர் வசூலை பொருத்தவரையில் அஜித் நடித்த துணிவு படம் நம்பர் 1 ஆகவும், விஜய் நடித்த வாரிசு நம்பர் 2 ஆகவும் இருக்கிறது என அறிவித்திருக்கிறார்கள்.

இதனாலும் தற்போது சோசியல் மீடியாவில் தல தளபதி ரசிகர்கள் அடித்துக் கொள்கின்றனர். இதற்கும் பத்தாது என்று தயாரிப்பாளர்களும் தங்களால் முடிந்த அளவு உசுப்பேத்தி விடுவதால், படத்தின் புரொடக்ஷன் சார்பில் வசூலை குறித்த முழு விவரத்தையும் விரைவில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →