கொம்பு முளைத்து கெத்து காட்டும் ஜெய் பீம் மணிகண்டன்.. வேர மாரி தெறிக்க விடும் மோட்டார் மோகன்

ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டாலே சினிமாவில் சில ஹீரோ, ஹீரோயின்களுக்கு கொம்பு முளைத்து விடும். அதன் பின் அவர்கள் ஆடும் ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். இப்படி கெட்ட ஆட்டம் போட்டு வளரும் ஹீரோக்கள் தங்களது கேரியரையே தொலைத்த கதைகள் இங்கு ஏராளம். ஆனால் அவர்கள் மத்தியில் நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் அகங்காரம் காட்டாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்கிறார்.

நடிக்க வருவதற்கு முன்பு இவர் படங்களுக்கு வசனங்கள் எழுதிக் கொண்டிருந்தார். அதற்காக “பிகைன்ட் வூட்ஸ்” நிறுவனம் இவருக்கு தங்க மெடல் அணிவித்து கௌரவப்படுத்தி இருக்கிறது. அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இவருக்கு வளரும் வாய்ப்பு கிடைத்தது. 2013ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இவருக்கு அறிமுகம் கிடைத்தது.

யார் என்று தெரியாமலே கிட்டத்தட்ட10 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.அதன் பின் 2020 ஆம் ஆண்டு தான், இவருக்கு தமிழ் சினிமாவில் “ஏலே” என்ற படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அடுத்தடுத்து இவருக்கு நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கியது.நெற்றிக்கண், ஜெய்பீம் என நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய சினிமா கேரியரை வளர்த்துக் கொண்டார்.

2021ஆம் ஆண்டு மணிகண்டன் நடித்த ஜெய் பீம் படம் இவருக்கு தனி ஒரு அடையாளத்தை கொடுத்தது. 2023ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த குட் நைட் படம் இவரை பெரிய ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது. அதன் பின்னும் மணிகண்டன் எப்படி முதல் படத்தில் இருந்தாரோஅதை போல் தான் இப்பொழுதும் இருந்து வருகிறாராம்.

ஹீரோ அந்தஸ்து வந்தவுடன் 5-6 ஜிம் பாய்ஸ் உடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் நடிகர்கள் மத்தியில் இவர் தனி ஆளாகத்தான் வருவாராம். அவருக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள ஒரே ஒரு டச்சப் பாய் மட்டும் வைத்திருக்கிறாராம். அவரிடம் கைக்குட்டை, பவுடர் போன்ற பொருட்களை இவரே போய் வாங்கி அலங்காரம் செய்து கொள்வாராம். இப்படி இவரை பற்றி நிறைய நல்ல விஷயங்களை படக்குழுவினர் சொல்லி அசத்துகின்றனர்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment