தக் லைஃப்பில் ஜெயம் ரவி விலகுவதற்கு இதுதான் காரணம்.. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த செல்லப்பிள்ளை!

Jayam Ravi came out in anger after hating Thug Life movie: சரித்திர நாவலை பின்புலமாக கொண்டு மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மணிரத்தினம் நீண்ட கால காத்திருப்புக்குப் பின் கையில் எடுத்த திரைப்படம் தான் தக் லைஃப்.

பான் இந்தியா மூவியாக உருவாகுவதால் தன் கொள்கைகளில்  இருந்து சற்று விலகி ஆங்கிலத்தில் தலைப்பு வைத்து கமலுடன் ஒன்றிணைந்தார்.

நாயகனுக்கு பின் கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் கழித்து இந்த ஜோடி இணைவதால் சினிமா ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிக அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மணிரத்தினத்துடன் இணைந்ததின் மூலம், ஏற்கனவே வெயிட்டிங்கில் வைத்திருந்த இயக்குனர் ஹச் வினோத்தை டீலில் விட்டார் கமல். படத்திற்கான அறிவிப்பு வந்த போதும் பட வேலைகள் என்னவோ ஆமை வேகத்திலேயே நகர்ந்தது.

கமலுடன் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி என பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் இணைய ரசிகர்களிடையே அதிக ஹைப்பை ஏற்படுத்தியது தக் லைஃப்.

படவேலைகள் தாமதமாக தொடங்க துல்கர் வெளிப்படையாகவே மணிரத்தினத்திடம் கூறி இதிலிருந்து விலகினார்.

இருந்த போதும் பொன்னியின் செல்வன் படத்தை கருத்தில் கொண்டு அதில் நடித்த நடிகர்கள் பலரும் அமைதி காத்து வந்தனர்.

தக் லைஃப்பில் துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவை களம் இறக்க ஆர்வம் கொண்டார் மணிரத்தினம்.

ஏற்கனவே இவரின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்த சிம்பு ஒரே டேக்கில்  இவர் எதிர்பார்ப்பதை கண் முன் கொண்டு வர இம்ப்ரஸ் ஆனார் மணிரத்தினம்.

இதனாலேயே துல்கர் சல்மானுக்கு பதில்  சிம்புவை உள் நுழைத்தார் இயக்குனர்.

தக் லைஃப்பில் திடீரென ஏற்பட்ட இந்த மாற்றம் ஜெயம் ரவிக்கு எரிச்சலை உண்டாக்கவே பல்வேறு காரண காரியங்களை கூறி விலகுவதாக அதிரடியாக அறிவித்தார் ஜெயம் ரவி.

தக் லைஃபில் ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த்சாமி நடிக்க வாய்ப்பு

தான் மேற்கொண்ட முடிவில் எந்த ஒரு மாற்றமும் செய்யாது ஜெயம் ரவியின் கேரக்டருக்கு அரவிந்த் சாமியை நடிக்க வைக்க முடிவு செய்தார் இயக்குனர்.

ரோஜா, பம்பாய் போன்ற வெற்றிப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அரவிந்த்சாமி.

அதன்பின் மணிரத்தினத்தின் அலைபாயுதே, செக்கச் சிவந்த வானம் போன்ற திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளுக்கு வருவது என்றாலும் கூட மணிரத்தினம் கூப்பிட்டார் என்ற ஒரு காரணத்திற்காகவே வந்து நடித்துக் கொடுத்துப் போனாராம்.

அதே போல் இப்போதும் மணிரத்தினம் அழைத்ததின் பேரில் தக் லைஃப்பில் ஜெயம் ரவியின் கேரக்டருக்கு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி. குரு பக்தினா இப்படித்தான் இருக்க வேண்டும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment