மகன்களை நினைத்து பெருமை கொள்ளும் ஜெயம் ரவி பெற்றோர்.. வைரலாகும் புகைப்படம்

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்கள் ஜெயம் ரவி மற்றும் ஜெயம் ராஜா. இவர்கள் இருவருமே அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது தந்தை எடிட்டர் மோகன் ஆவார். ஒரே நேரத்தில் தனது இரண்டு மகன்களை நினைத்து பெருமை கொள்ள அளவிற்கு ஜெயம் ரவி பெற்றோர் புரித்துள்ளனர்.

அதாவது மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நாயகனான அருள்மொழி வர்மன் அதாவது ராஜராஜ சோழன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கனகச்சிதமாக ஜெயம் ரவி பொருந்தி இருந்தார்.

அதுமட்டுமின்றி ஜெயம் ரவியை பலரும் பாராட்டி பேசுகின்றனர். அதேபோல் ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குனரான மோகன் ராஜா தற்போது காட்ஃபாதர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

சிரஞ்சீவி தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் காட்ஃபாதர் படம் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இப்படம் வசூல் ரீதியாகவும் வேட்டையாடி வருகிறது. மூன்றே நாட்களில் 69 கோடி வசூல் செய்திருந்தது.

இந்நிலையில் மோகன் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அப்பா, அம்மா இருவரும் பொன்னியின் செல்வன் மற்றும் காட்ஃபாதர் படத்தின் விளம்பர பதாகை முன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் ஜெயம் ரவியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஜெயம் ரவி மற்றும் ஜெயம் ராஜா இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ஒரே நேரத்தில் அண்ணன், தம்பி இருவருக்கும் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. மேலும் இந்த வெற்றியைத் தொடர்ந்து பல வெற்றியை அடைவார்கள் என அவரது ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.

Jayam-ravi-parents
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →