மணிரத்னத்தை பார்த்து வியந்துபோன ராஜமவுலி.. எழுந்து நின்ற சம்பவத்தை கூறிய ஜெயம் ரவி

மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸுக்காக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தான்.

பொன்னியின் செல்வன் நாவலின் நாயகனான அருள்வர்மனின் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு ஊடகத்திற்கு ஜெயம் ரவி பிரத்தேக பேட்டி கொடுக்கும் போது ராஜமௌலியுடன் உரையாடிய விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

அதாவது ஜெயம் ரவி பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இடம் பேசும்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை 150 நாட்களிலேயே மணிரத்தினம் எடுத்து முடித்துள்ளார் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டவுடன் ராஜமவுலி நாற்காலியில் இருந்து எழுந்து விட்டாராம்.

அது மணிரத்தினத்திற்கு கொடுக்கும் மரியாதை நிமித்தமாக இவ்வாறு ராஜமவுலி செய்துள்ளார். இது எப்படி சாத்தியம் என்று ஜெயம் ரவியிடம் ராஜமௌலி கேட்டுள்ளார். ஏனென்றால் பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் போன்ற படங்களை கிட்டத்தட்ட ஐந்து வருட கால அவகாசத்தில் ராஜமவுலி எடுத்திருந்தார்.

ஆனால் பொன்னியின் செல்வன் என்ற மிகப்பெரிய படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை 150 நாட்களில் எடுப்பது எப்படி சாத்தியம் என ராஜமவுலி கேட்டுள்ளார். அதாவது பொன்னியின் செல்வன் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்த போது ஒரு இடத்தில் காலை 6:00 மணிக்கு தண்ணீர் கம்மியா இருக்கும்.

அந்த நேரத்தில் தினமும் அங்கு சூட்டிங் நடக்கும். அதன் பின்பு 9 மணிக்கு அங்கு தண்ணீர் அதிகமாகிவிடும், இதனால் வேறு இடத்திற்கு வந்த மற்றொரு காட்சியின் சூட்டிங் நடக்கும். இவ்வாறு சரியான ஷெடுல் போட்டு மணிரத்தினம் படப்பிடிப்பு நடத்துவார். மேலும் வானிலை அறிக்கையும் முன்பே தெரிந்து கொண்டு மணிரத்தினம் அதற்கு ஏற்றார் போல் காட்சியை எடுக்க திட்டம் தீட்டி இருப்பாராம். இதனால் தான் இவ்வளவு குறுகிய காலத்திலேயே இந்தப் படத்தை எடுக்க முடிந்தது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →