இந்த வாரம் தியேட்டரில் 11 படங்கள்.? கதாநாயகனாக களம் இறங்கும் பிக் பாஸ் ராஜு

July 18 Theatre Release Movies : கடந்த வாரம் சித்தார்த்தின் 3BHK, பறந்து போ போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்த சூழலில் இந்த வாரம் கிட்டத்தட்ட 11 படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ளது. அவ்வாறு ஜூலை 18 என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம்.

முதலாவதாக காளி வெங்கட், சந்தன பாரதி மற்றும் பலர் நடிப்பில் ஹாரர் கலந்த திரில்லர் படமாக வெளியாக இருக்கிறது ஜென்ம நட்சத்திரம். இதை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜூ ஜெயமோகன், ஆதித்யா பிரசாத் நடிப்பில் உருவாகி இருக்கும் பன் பட்டர் ஜாம் படம் வெளியாகிறது.

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஷீலா ராஜ்குமார் மற்றும் ஆதவன் நடிப்பில் சர்வைவல் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் கெவி படம் ஜூலை 18 வர இருக்கிறது. பாரதி சிவலிங்கம் இயக்கத்தில் விக்னேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் சென்ட்ரல் படமும் இதே நாளில் வெளியாகிறது.

ஜூலை 18 வெளியாகும் 11 படங்கள்

சதீஷ் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அலிஃபா, காசி முருகன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆக்நேயா என்ற திர்ல்லர் படம் வெளியாகிறது. கோபி இயக்கத்தில் தினேஷ், அப்புகுட்டி, தம்பி ராமையா மற்றும் பலர் நடிப்பில் யாதும் அறியான் படம் உருவாகி இருக்கிறது.

இந்த இடத்தில் மதுமிதா நடிப்பில் அரசியல் சார்ந்த கதைக்களமாக கொண்டுள்ள நாளை நமதே படமும் வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாகிறது. மேலும் மெட்ராஸ் பட நடிகர் கலையரசு நடிப்பில் உருவாகி இருக்கும் ட்ரெண்டிங் படமும் ரிலீஸ் ஆகிறது.

இது தவிர காலம் புதிது, டைட்டானிக் மற்றும் ஆக்கிரமிப்பு போன்ற படங்களும் ஜூலை 18 வெளியாகிறது. ஆனால் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →