கேஜிஎப் 50 நாட்கள் செய்த சாதனையை தவிடுபொடியாக்கிய காந்தாரா.. ஓடிடி-யில் எப்போது வெளியீடு தெரியுமா.?

கன்னட இயக்குனர் ரிஷிப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியான காந்தாரா திரைப்படம் அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் 50 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் தாறுமாறாக ஓடி 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கிறது.

ஆனால் கன்னட திரைப்படம் ஆக கேஜிஎஃப் 2, 50 நாட்களில் வெறும் 400 காட்சிகள் மட்டுமே தரையிட்ட நிலையில், காந்தாரா திரைப்படம் 1000 காட்சிக்கு மேல் ஸ்கிரீனிங் செய்து இந்திய திரை உலகில் வசூல் சாதனைகள் புரிந்திருக்கிறது. அத்துடன் உலக அளவில் கேஜிஎஃப் 2 வசூலை முறியடிக்காவிட்டாலும் கர்நாடகா பாக்ஸ் ஆபிஸில் கேஜிஎஃப் 2 கலெக்ஷனை முறியடித்து இருக்கிறது காந்தாரா.

இந்நிலையில் காந்தாரா திரைப்படம் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது. வரும் நவம்பர் 24ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காந்தாரா திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முதலில் கன்னட மொழியில் மட்டும் வெளியான காந்தாரா அதன் பிறகு அந்த படத்திற்கு கிடைக்கும் வெற்றியால் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியாகி அங்கும் கலக்கி உள்ளது. ஆகையால் தியேட்டர்களில் மட்டுமல்ல தற்போது ஓடிடி தளத்திலும் காந்தாரா மிரள விட போகிறது.

இந்த படத்தின் மொத்த வசூல் 400 கோடியை தாண்டி இருக்கும் நிலையில் உலக சினிமாவையே காந்தாரா திருப்பி பார்க்க வைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் பின்னணி இசையும் அதிரடி சண்டை காட்சிகளும் பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது மட்டுமல்லாமல், செண்டிமெண்ட்க்கும் ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லாத படமாக ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.

மேலும் இந்த படத்தில் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் வேட்டை தொழில் போன்றவற்றை இதுவரை யாரும் சொல்லாத அளவுக்கு சுவாரசியமாக கூறியது தான் இந்த படத்தின் வெற்றி ஆக பார்க்கப்படுகிறது. இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிஷப் செட்டியை நேரில் அழைத்து தங்கச் செயின் ஒன்றை பரிசாக கொடுத்து பாராட்டியுள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →