Star: கவினின் இணைய கூலிப்படை கொடுத்த பில்டப்.. போட்ட காசை எடுக்க முடியாமல் தவிக்கும் ஸ்டார் வசூல் ரிப்போர்ட்

Star: கவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார் கடந்த வாரம் வெளியானது. ஆனால் முதல் நாளில் இருந்த ஆரவாரம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

அதனால் வசூலும் பெருத்த அடி வாங்கியது. இருப்பினும் சோசியல் மீடியாவில் ஸ்டார் படத்தை ஆஹா ஓஹோ என்று நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளினார்கள்.

இன்னும் சிலர் ஒரு படி கூடுதலாக போய் கவின் தான் அடுத்த சிவகார்த்திகேயன், அடுத்த தளபதி என்றெல்லாம் கூவினார்கள். ஆனால் இதெல்லாம் செய்தது அவருடைய இணைய கூலிப்படை என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

மேலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. போட்ட காசை எடுப்பதற்கே அவர்கள் திண்டாடி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் வசூல் நிலவரம்

அதன்படி ஸ்டார் படத்தின் பட்ஜெட் என்று பார்க்கையில் 12 கோடியாக உள்ளது. அதே சமயம் படம் 19 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் உண்மையில் இது அதிகாரப்பூர்வமான வசூல் கிடையாது என்றும் ஒரு தரப்பு கூறுகின்றனர். அப்படி பார்த்தால் ஸ்டார் படத்தின் வசூல் 12 கோடியை எட்டவில்லை என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ட்ரெய்லரை காட்டி படக்குழு ஏமாற்றியது தான். ட்ரெய்லர் மீது இருந்த எதிர்பார்ப்பால் தான் முதல் நாள் தியேட்டரில் கூட்டம் கூடியது.

ஆனால் படத்தின் முதல் காட்சியை பார்த்ததுமே படம் பற்றிய கண்ணோட்டம் மாறிவிட்டது. அதுவே இந்த வசூல் அடி வாங்கியதற்கு காரணம் என்றும் கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →