கல்யாணத்துக்கு ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ்.. யாரு அந்த மாப்பிள்ளை? எங்க தெரியுமா?

மலையாள நடிகை மேனகா, சினிமா தயாரிப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோரின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வரும் இவர் பாலிவுட் சினிமா ஒன்றிலும் நடித்து வருகிறார். தெறி படத்தின் ரீமேக்கில் இவர் தற்போது நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு திருமணம் என்று தற்போது ஒரு செய்தி உலா வருகின்றது. இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பல முறை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் செய்து நெட்டிசன்கள் வளைகாப்பும் நடத்திவிட்டனர்.

ஏற்கனவே, கேரளாவை சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளபோவதாக வதந்திகள் வெளியாகின. அதன் பின்னர் பிரபல இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் – கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மணமுடிக்க இருப்பதாகவும் தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில் தற்போது வெளி வரும் செய்தியாவது உண்மையா என்ற கேள்வி பலருக்கு வந்துள்ளது.

சொந்தகார பையனோடு திருமணம்

சமீபத்தில் ஒரு மலையாள ஊடகத்தில் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில், தனது பெற்றோர் பார்த்திருக்கும் உறவுக்கார பையனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளவுள்ளாராம். இவரது திருமணம் கோவாவில் நடைபெற இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தி ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னதாக வந்த நிலையில், தற்போது, மீண்டும் இதை ஒரு சிலர் உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் அறிமுகமாகும் இந்த நேரத்தில் இவர் இந்த முடிவை எப்படி எடுத்தார் என்று அதற்குள் ஒரு சிலர் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதை தொடர்ந்து இதற்க்கு ஏதாவது பதில் கீர்த்தி சுரேஷ் கொடுப்பாரா? அல்லது கண்டும் காணாமல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment