சக்சஸ் மீட் அங்க, தமிழ்நாட்டில் குபேராவுக்கு விழுந்த அடி.. இன்னும் எத்தனை படத்தை காவு வாங்கப் போதோ!

கடந்த வாரம் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படம் வெளிவந்தது. இதில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழ் ரசிகர்களுக்கு தெலுங்கு இயக்குனர் என்பதால் கனெக்ட் ஆகவில்லையா என்பது தெரியவில்லை, தமிழ்நாட்டில் குபேராவிற்கு வரவேற்பு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆனால் அதே இது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா இருப்பதால் அங்கு படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குபேரா படத்திற்காக சக்சஸ் மீட் வைத்து தனுஷை கூப்பிட்டு நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவி மாத்தி மாத்தி பாராட்டி மகிழ்ந்தனர். கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் அப்படி கிடைக்கவில்லை என்றால் அது விருதே இல்லை என்று பாராட்டி உள்ளனர்.

இதனால் தமிழ்நாட்டில் மார்க்கெட் குறைந்தாலும் தெலுங்கில் தனுசுக்கு ஜாக்பாட் தான் என்று கூற வேண்டும் அடுத்தடுத்து தெலுங்கு இயக்குனர்கள் படம் எடுப்பதற்கு வரிசை கட்டி நிற்கின்றனர். பெரிய பெரிய முதலாளிகள் முதலீடு செய்வதற்கும் தயாராக உள்ளனர்.

இப்படி கொண்டாடி ரசிக்க வேண்டிய படத்தை ரசிக்க தெரியாமல் தமிழ்நாட்டு ரசிகர்கள் இருப்பதாக பல கமெண்ட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. Indian-2, ரெட்ரோ, ThugLife படத்தை காலி செய்தது போல தற்போது குபேரா படமும் தமிழ்நாட்டில் கூடாரம் காலி ஆகிவிட்டது.

அடுத்த வாரம் இன்னும் பல படங்கள் வருவதால் குபேரா படத்திற்கான ஸ்கிரீன் எண்ணிக்கை குறைப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாம். 3 நாட்களில் குபேரா படம் தமிழ்நாட்டில் மட்டும் 13 கோடி உலகளவில் 100 கோடி வசூலை தாண்டி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 70% வசூல் தெலுங்கு இண்டஸ்ட்ரில இருந்து தான் வந்துள்ளதாக தெரிகிறது.

தனுஷ் சக்சஸ் மீட்டில் பெரிய பட்ஜெட், சூப்பர் ஹீரோக்கள், அதிக முதலிடில் CG வொர்க் இல்லாமல் இன்றைய காலத்திலும் தூய்மையான மனிதநேயம், எமோஷனல் கனெக்ட் வைத்து ஒரு படத்தை ஹிட் கொடுக்கலாம் என்பதை குபேரா மூலம் நிரூபித்ததற்கு நன்றி சேகர்கம்முலா ஐயா! தமிழில் கூட, TouristFamily அதையே நிரூபித்ததுஎன பெருமையாக பேசி உள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →