குபேராவை கழுவி ஊத்த இவ்வளவு காரணங்களா.? தனுஷ் பேசுன பேச்சுக்கு

தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜுனா நடிப்பில் குபேரா படம் நேற்று வெளிவந்தது முதல் நாளில் முதல் பாதியில் நல்ல விமர்சனம் பெற்றது இரண்டாம் பாதியில் கழுவி ஊத்த ஆரம்பித்து விட்டனர். மேடையில் தனுஷ் மற்றும் படக்குழு ஆவேசமாக பேசிய பேச்சுக்கு படத்தில் சரக்கு ஒன்றும் இல்லை என்பது போன்று ஆகிவிட்டது.

இதனால் நயன்தாரா, சிம்பு, சிவகார்த்திகேயன் தரப்பு தற்போது படு குஷியில் உள்ளனர். தனுஷின் முழு நடிப்பை வெற்றிமாறன் போல் சரியாக பயன்படுத்தவில்லை சேகர் கம்புல்லா. மட்டமான ஸ்கிரீன் ப்ளே இந்த படத்திற்கு பெரும் நெகட்டிவ் ஆக அமைந்து விட்டது.

“எனது எனது எனதே இந்த உலகம்” என்ற பாடல் மிக அற்புதமாக வந்திருக்கிறது. நாகார்ஜுனாவின் கேரக்டர் தேவையில்லாத ஆணியாக பார்க்கப்படுகிறது. ராஷ்மிகா வரும் காட்சிகள் அனைத்துமே போர் அடிக்கிறது. படம் ரொம்ப லென்தா ஸ்லோவா போனதால் சில ரசிகர்களுக்கு பிடிக்காமலேயே போய்விட்டதாம்.

கடைசியா பார்க்கும்போது படம் சுத்த போர் என்று ஒரே வரியில் முடித்து விட்டனர். ஆனால் கடைசி 10 நிமிடம் சேகர் கம்புல்லா-தனுஷ் கூட்டணி மிரட்டிவிட்ட சம்பவம் சற்று ஆறுதலாக உள்ளதாம். தமிழ்நாட்டை விட தெலுங்கில் அதிகமாக முதல் நாளில் 8.75 கோடி வரை வசூல் செய்துள்ளது.

குபேரா முதல் நாளில் மட்டும் 13 கோடி வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றன. சனி மற்றும் ஞாயிறுகளில் வரும் மொத்த கலெக்ஷனை வைத்து தான் படம் போட்ட காசை எடுக்க முடியுமா? என்பதே தெரிய வரும். இவளோ negative இருந்தாலும் புக்கிங் ஒருபுறம் வசூலை அள்ளித்தான் வருகிறது.

தனுஷ் நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும் இனி தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி போடும்போது சற்று கவனம் வேண்டும். இதுபோன்ற சிக்கலில் மாட்டிக்கொண்டு தமிழில் இருக்கும் மார்க்கெட்டையும் அழித்துவிடாமல் பார்த்துக் கொண்டால் குபேராவுக்கு நல்லது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →