ரசனையை புரிஞ்சிக்க முடியாமல் குபேரா ஏற்படுத்திய பிரிவினை.. சிரஞ்சீவி கொடுத்த பூஸ்ட்

தனுஷ் மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குபேரன் படம் கடந்த 20ஆம் தேதி ரிலீஸ் ஆனது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வசூல் வேட்டையை குறிவைத்து இந்த படத்தை களம் இறக்கினார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படத்திற்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.

தமிழில் தனுஷ் தான் முதல் ஹீரோ போல காட்டினார்கள் ஆனால் தெலுங்கு பக்கம் நாகர்ஜுனாவை வைத்து வசூலுக்கு திட்டம் போட்டார்கள். மொத்தமாக இந்த படம் இதுவரை 70 கோடிகள் வரை வசூலித்துள்ளது ஆனால் தமிழை காட்டிலும், தெலுங்கு பக்கம் சக்கபோடு போட்டு வருகிறது.

மொத்தமாய் இந்த படம் 100 கோடி வசூல் பெற்றுவிட்டது என கூறி வருகிறார்கள். இந்த படத்தின் சக்சஸ் மீட்டிற்கு மூத்த நடிகர் சிரஞ்சீவி வந்துள்ளார். அங்கே நடைபெற்ற விழாவில் தனுஷை பற்றி ஏகபோகமாக புகழ்ந்து தள்ளிவிட்டார் சிரஞ்சீவி. இயக்குனர் சேகர் கமலாவையும் பாராட்டி பேசினார்

சிறுவயதில் இருந்து தனுசை தனக்குத் தெரியும் என்றும் அப்போதே இவர் நல்ல நடிகராக வருவார் எனவும் ஆசீர்வதித்தேன் என தெரிவித்தார். அந்த விழாவில் தனுஷும் கலந்து கொண்டு தன் பங்கிற்கு இயக்குனர் சேகர் கம்முலாவை பாராட்டி தள்ளினார்.

இது ஒரு புறம் இருக்க தெலுங்கில் இந்த படத்தை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழில் இதற்கு சரியான வரவேற்பு இல்லை. படம் இங்கே அதிக வசூல் பெறவில்லை இதுவரை ஆறு நாட்கள் முடிவில் 8 கோடிகள் மட்டுமே வசூலித்துள்ளது. இதன் தியேட்டரிக்கள் உரிமையை 18 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளார் ராகுல். ஆனால் அவருக்கு லாபம் தரவில்லை.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →