இங்க பப்பு வேகாததால் அக்கட தேசத்தில் டேரா போட்ட குஷ்பூ.. தீயாய் வேலை செய்யும் பிரபலம்

சமீப காலமாகவே திரை பிரபலங்கள் நடிப்பதையும் தாண்டி ஒரு கட்டத்திற்கு மேல் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஒரு நடிகை தான் தற்பொழுது தீவிரமாக அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதுவும் இங்கே பப்பு வேகாததால் அக்கட தேசத்தில் டேரா போட்டு இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சினிமாவில் முழு நேர நடிகையாக வலம் வராமல் கெஸ்ட் ரோலை மட்டுமே ஏற்று நடித்து வந்தார். மேலும் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கால் பதித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். தற்பொழுது அதையெல்லாம் நிறுத்திவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் அந்த நடிகை.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் சின்னத்தம்பி படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் 200 படங்களுக்கு மேல் நடித்து தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார்.

மேலும் ரசிகர்கள் ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அது நடிகை குஷ்புவிற்கு தான். மேலும் சின்னத்திரையில் பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அரசியலிலும் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் கட்சியில் இணைந்தார்.

தற்பொழுது இவர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டுள்ளதால் அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். அதிலும் இங்கு அவர் இருக்கும் கட்சியில் அதிக மவுஸ் இல்லாததால் அக்கட தேசத்திற்கு பறந்துள்ளார் அம்மணி. அதுமட்டுமல்லாமல் அங்கு சுலபமாக ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஹைதராபாத்திலேயே டேரா போட்டுள்ளார். மேலும் நடிகை குஷ்பூ தெலுங்கு சீரியல்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கேயே ஒரு பங்களாவையும் வாங்கி இருக்கிறார். இப்பொழுது அங்கே தான் இவரது காற்று வீசுகிறது என்பது போல் தனக்கு சாதகமான வேலைகளில் இறங்கி உள்ளார். மேலும் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி உள்ள குஷ்பூ தெலுங்கு சீரியல்களிலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக ஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் நடிப்பு என குஷ்பூ தீயாய் வேலை செய்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →