Lawrance and vijay: விஜய் அரசியல் என்ட்ரியின் காரணத்தை உடைத்த லாரன்ஸ் மாஸ்டர்.. உங்களுக்கு TVK-வில் ஒரு சீட்டு கன்ஃபார்ம்

Lawrance and Vijay: ராகவா லாரன்ஸ் நடிகர், இயக்குனர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் என்பதையும் தாண்டி மக்களுக்கு ஒரு நல்ல மனிதராகவும் பல நல்லதுகளை செய்து வருகிறார். முக்கியமாக மாற்றுத்திறனாளிகளிடம் இருக்கும் திறமைகளை கண்டுபிடித்து அதை முன்னுக்கு கொண்டு வரும் வகையில் லாரன்ஸ் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

அத்துடன் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறார். இப்படி இவருடைய நல்ல விஷயங்களை பாராட்டிக் கொண்டே போகலாம் எக்கச்சக்கமாக இருக்கிறது.

அந்த வகையில் பலரும் வியந்து பார்க்கும் வகையில் தற்போது விவசாயிகளுக்கு 10 டிராக்டர் வாங்கி கிராமங்களில் ஏழ்மையில் வாடும் விவசாயிகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை கூட்டும் வகையில் உதவி கரம் நீட்டி வருகிறார். அது மட்டும் இல்லாமல் முதியவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

விஜய்யின் அரசியல் ரகசியத்தை அப்பட்டமாக கூறிய லாரன்ஸ்

இதனைத் தொடர்ந்து இந்த மாதத்தில் துவக்கப்பட்ட “மாற்றம்” என்ற ஒரு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இவருடன் இணைந்து பொதுமக்களுக்கு நல்லது செய்யும் வகையில் ஒன்றுகூடி இருக்கிறார்கள். இவருடைய இந்த மனசுக்கு ரஜினி பாராட்டு மழை பொழிந்து இருக்கிறார்.

அப்படிப்பட்ட இவரை பத்திரிகையாளர்கள் விஜய்யின் அரசியல் வருகையை பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு விஜய் சார் எதையும் யோசிக்காமல் ஆரம்பிக்க மாட்டார். அவர் எது செஞ்சாலும் அதற்குப் பின்னணியில் மக்களின் நலனுக்காக தான் இருக்கும். அந்த வகையில் எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.

அவரைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் எந்த ஒரு விஷயம் பண்ணாலும் அதில் பெர்ஃபெக்ஷன் ஆக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அந்த வகையில் அரசியலுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல நல்ல விஷயங்களை செய்து அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவார் என்று கூறி இருக்கிறார்.

லாரன்ஸ் இப்படி சொல்வதை பார்க்கும் பொழுது இனம் இனத்தோடு சேர்ந்தால் தான் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏற்ப விஜய்யின் அரசியலில் லாரன்ஸ் கூட்டணி வைத்து மக்களுக்கு நல்லது செய்ய ஒரு ஐடியா இருப்பது போல் தெரிகிறது. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் லாரன்ஸ்க்கு ஒரு சீட்டு கன்ஃபார்ம். எது எப்படியோ இருவரும் சேர்ந்து மக்களுக்கு ஒரு விடிவு காலத்தை ஏற்படுத்தினால் போதும்

ஏற்கனவே விஜய் அரசியலில் நுழைந்த பொழுது பல பிரபலங்கள் கூறியது கிட்டத்தட்ட 250 கோடி சம்பளமாக வாங்கும் ஒரு ஹீரோ அனைத்தையும் உதறிவிட்டு அரசியலுக்குள் நுழைகிறார் என்றால் கண்டிப்பாக மக்களின் நலனுக்காக தான் இருக்கும். அந்த வகையில் அவருடைய முயற்சிக்கு பாராட்டுக்கள் என்று பல பிரபலங்கள் கூறியிருக்கிறார்.

இப்படி ஒவ்வொருவரும் விஜய்ன் அரசியலின் வருகைக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் எடுத்து சொல்லி அவருக்கு ஒரு ஊக்குவிப்பை கொடுத்து வருகிறார்கள். இது கண்டிப்பாக விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →