ரோலக்ஸ் கெட்டப்பிற்கு மாறிய குட்டி விக்ரமின் புகைப்படம்.. கூப்பிட்டு பாராட்டிய கமல்

 

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் திரையரங்கில் தாறுமாறாக ஓடி தமிழகத்தில் மட்டும் 175 கோடியையும், உலக அளவில் 420 கோடியையும் பாக்ஸ் ஆபீஸில் குவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா, நரேன் என பல முன்னணி நடிகர்கள் நடித்து அசத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் கமலஹாசனின் பேரனாக நடித்த குட்டி விக்ரம் , தர்ஷனின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஏனென்றால் விக்ரம் படத்தில் தர்ஷனை மையமாக வைத்தே முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலும் இந்த படத்தில் தர்ஷன் கமலின் தோளிலேயே இருப்பதாக பல காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டு, அவரிடமே கமல் அதிகநேரம் பேசுவதாகவும், அதற்கு தர்ஷனின் ரியாக்சன் உள்ளிட்டவை அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.

இந்தப் படத்திற்குப் பிறகு சோஷியல் மீடியாவில் தர்ஷனின் புகைப்படம் மற்றும் வீடியோ அனைத்தும் வைரலாகிறது. இந்நிலையில் தற்போது இந்த குட்டி பையன், விக்ரம் படத்தில் இடம்பெறும் கமல்ஹாசன் மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போதை பொருள் கடத்தும் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தை எதிர்த்து சண்டை போட்டுக் கொள்வார். விக்ரம் படம் முழுக்க கமல்ஹாசன் அந்த ரோலஸ் எதிர்த்து போட்டிப்போட்டு கொள்வதற்காகவே முயற்சி செய்து வருவார்.

படத்தின் இறுதியில் கமல்ஹாசன் ரோலக்ஸ் பார்த்து விட்டு அமைதியாக சென்று விடுவார். அடுத்து கமல்ஹாசன் ரோலக்சை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை. இதில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா அற்புதமாக நடித்திருக்கிறார் என அனைவரும் பாராட்டி நிலையில் அந்த கெட்டப்பை தற்போது குட்டி கமல் போட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் விக்ரம் கெட்டப் சூப்பர். ஆனால் ரோலக்ஸ் கெட்டப்பில் குட்டி விக்ரம் இருப்பதை பார்த்தால் கமல்ஹாசன் கோபப்படுவார் என கிண்டல் செய்கின்றனர். ஆனால் இதை அறிந்த கமல், குட்டி விக்ரமை கூப்பிட்டு பாராட்டியுள்ளார்.

kutty-vikram-cinemapettai
kutty-vikram-cinemapettai
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →