32 வருஷம் பின்னாடி போகும் ரஜினி.. தலைவரை மொத்தமாக மாற்றி செதுக்கும் லோகேஷ்

Rajini-Lokesh: சூப்பர் ஸ்டார் தற்போது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளில் பிஸியாக இருக்கிறார். ஐஸ்வர்யா இயக்கத்தில் இவர் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர இருக்கிறது. அதே நேரத்தில் ரஜினி வேட்டையன் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கிறார்.

இன்று ஹைதராபாத்தில் தொடங்கும் இப்படத்தின் சூட்டிங் 15 நாட்கள் வரை நடக்க இருக்கிறது. அதற்காக நேற்றே ரஜினி ஹைதராபாத் சென்று விட்டார். இப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.

மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அப்படத்திற்காக ரஜினி 32 வருடம் பின்னால் போக போகும் செய்தி ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

அதாவது இப்படத்தில் ரஜினியை மிகவும் இளமையாக காட்ட லோகேஷ் முடிவெடுத்துள்ளாராம். அதன்படி டி ஏஜிங் முறையில் தளபதி படத்தில் சூப்பர் ஸ்டார் எப்படி ஸ்டைலாக இருந்தாரோ அது போன்று காட்ட இருக்கிறார்களாம்.

அந்த வகையில் தளபதி படத்தில் சூர்யாவாக வரும் ரஜினி அவ்வளவு அம்சமாக இருப்பார். அந்த கேரக்டரை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. தற்போது அந்த கெட்டப்பில்தான் லோகேஷ் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த செய்தி நிச்சயம் ரசிகர்களுக்கு குதூகலமாக தான் இருக்கும்.

ஏற்கனவே லோகேஷ் இப்படம் ரஜினிக்கு தனித்துவமிக்க கதையாக இருக்கும் என்று கூறியிருந்தார். தற்போது இந்த தகவலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இப்படத்திற்கு அடுத்து ரஜினி மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதாக இருக்கிறார். ஆனால் அது மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →