மணிரத்னத்தை மதிக்காத லைக்கா.. சொல்லாமல் எடுத்த முடிவால், விழி பிதுங்கி நிற்கும் நிலை!

பொன்னியின் செல்வன் படத்தை மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கியுள்ளார் மணிரத்னம். இப்படத்தில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து இருப்பதால் அவர்களுக்கு ஒரு பெரும் பங்கு சம்பளமாக போயுள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் உடை, அலங்காரம் என ஒவ்வொன்றுக்கும் பெரிய தொகை செலவழிக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு வரும் லாபத்தில் 30 சதவீத பங்கு மணிரத்னத்திற்கு, 70 சதவீத பங்கு லைக்கா நிறுவனத்திற்கும் சேரும்.

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான சோழா சோழா என்ற பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்து வரும் தில் ராஜூவும் கலந்துகொண்டார்.

முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாடலை பார்த்தவுடன் இப்படத்தை தெலுங்கில் நான் வெளியிடுகிறேன் என சொல்லி உள்ளார். இந்நிலையில் மணிரத்னத்திடம் சொல்லாமல் லைக்கா புரொடக்ஷன்ஸ் இப்படத்தின் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் இடம் கொடுத்துள்ளது.

இதைக் கேட்ட மணிரத்தினம் கோபப்பட்டு உள்ளார். ஏனென்றால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிட்டால் அவர்களுக்கும் பங்கு தரவேண்டும். அதன்பின்பு லைக்கா நிறுவனம், ரெட் ஜெயின் மூவிஸ் இல்லாமல் தற்போது எந்த படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாது.

அதனால் தான் அந்நிறுவனத்திற்கு படத்தை கொடுத்துள்ளோம் என வாதாடி உள்ளனர். அதன்பிறகு மணிரத்னமும் வேறு வழியில்லாமல் சரி என ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி பான் இந்திய திரைப்படமாக ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →