கௌரவத்தை விட்டுக் கொடுக்காத உதயநிதி.. ரெட் ஜெயன்ட் மூவிஸிடம் அடிபணிந்த லைக்கா

2008 குருவி படத்தில் ஆரம்பித்து 2024 இந்தியன் 2 படம் வரை பல படங்களை வாங்கி விநியோகம் செய்து லாபம் பார்த்து வருகிறது ரெட் ஜெயன்ட் மூவிஸ். இவர்களிடம் கணக்கு வழக்கு மிக நேர்த்தியாகவும், கரெக்டாகவும் இருக்கிறது என்பதுதான் இப்பொழுது ஹாட் டாபிக்.

எந்தெந்த படத்திற்கு எவ்வளவு லாபம் வருகிறது என்பதை துல்லியமாக அளவிட்டு பிரித்துக் கொடுக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு தியேட்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வாங்கி விநியோகம் செய்து வருகிறது

இப்பொழுது டி ஜே ஞானவேலு இயக்கிய வேட்டையன் படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இந்த படத்திற்கு பலத்த போட்டி நிலவினாலும், அவர்களை எல்லாம் ஓரங்கட்டி வேட்டையன் பட உரிமையை கைப்பற்றியுள்ளார் ரெட் ஜெயன்ட் உதயநிதி. அக்டோபர் 10ஆம் தேதி இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் எல்லா தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்கிறது.

ரெட் ஜெயன்ட் மூவிஸிடம் அடிபணிந்த லைக்கா

வேட்டையன் படத்தை எப்படியாவது வாங்க வேண்டும் என்று மல்லு கட்டிய விநியோகஸ்தர் பைவ் ஸ்டார் கதிரேசனுக்கு இந்த முறை கைகூடி வரவில்லை. நேரடியாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் தரப்பிலிருந்து, தயாரிப்பாளர் லைக்காக சுபாஷ்காரனுடன் டீல் பேசி உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு லைக்காவை நம்பி இந்தியன் 2 படத்தை வாங்கி பெரிய நஷ்டத்தை சந்தித்தது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ். இப்பொழுது அந்த கணக்கை வேட்டையன் படத்தை வைத்து சமன் செய்துள்ளது. இந்தியன் 2 பட தோல்வியால் லைக்கா, ரெட் ஜெயன்ட் மூவிஸிடம் சரண்டராகியுள்ளது.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment