மாநகரம் ஸ்ரீயா இது.? ஆள் அடையாளம் தெரியாமல் மெலிந்து போன புகைப்படம்

Actor Shri : லோகேஷின் இயக்கத்தில் உருவான மாநகரம் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஸ்ரீ. இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் தொடரில் நடித்திருந்தார்.

அதை அடுத்து சினிமா வாய்ப்பு கிடைத்த நிலையில் வழக்கு எண் 18/9 படத்தில் நடித்திருந்தார். இதில் அவரது வித்தியாசமான கதாபாத்திரம் ரசிகர்கள் இடம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்த நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

ஆனாலும் சினிமாவில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஸ்ரீயின் நடிப்பில் இறுகப்பற்று படம் வெளியாகி இருந்தது. அதன் பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்தது.

ஆள் அடையாளம் தெரியாமல் போன ஸ்ரீ

shri
shri

இப்போது அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறி மெலிந்த தேகத்துடன் இருக்கிறார். மேலும் தனது முடிக்கும் கலரிங் செய்திருக்கிறார்.

இது ஸ்ரீயா என யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உடனடியாக அவரது இன்ஸ்டால் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறதா என்று பார்க்கின்றனர். ஆனால் அவருடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் 2023க்கு பிறகு எந்த பதிவும் போடவில்லை.

இந்நிலையில் shri_blueticked என்ற சமூக வலைத்தள பக்கத்தில் ஸ்ரீயின் சமீபத்திய புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. மேலும் அவரின் இந்த நிலைமைக்கு என்ன காரணம், உடல் நிலையில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என பலரும் பரிதாபப்பட்டு வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →