வக்கீல் மனைவியை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்.. வழுக்கும் எதிர்ப்பு

Madampatti Rangaraj : கதாநாயகனாக படங்களில் நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். அதோடு அரசியலில் முக்கிய புள்ளிகள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீட்டு விழாக்களில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் இடம் பெறும்.

மிகவும் செல்வாக்குள்ள இவரை ஒரே நாளில் டேமேஜ் செய்தது ஒரு போஸ்ட் தான். அதாவது மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பளரான ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதாவது கல்யாண கோலத்தில் ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் 2025ல் குழந்தை பிறக்க உள்ளதாகவும், தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் போட்ட பதிவு காட்டு தீயாய் பரவியது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் வரை ரங்கராஜுடன் அவரது முதல் மனைவி ஸ்ருதி புகைப்படம் போட்டு இருக்கிறார்.

வழக்கறிஞர் மனைவியை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்

அதுவும் தனது இரண்டு மகன்களுடன் சேர்த்து பதிவு போட்டிருந்தார். இப்படி இருக்கையில் இவர்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகாமலேயே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ‌ குறிப்பாக ஸ்ருதி வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

இப்படி இருக்கையில் வழக்கறிஞராக இருக்கும் மனைவியை ரங்கராஜ் ஏமாற்றிவிட்டாரா என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் இரண்டாம் திருமணம் குறித்து ரங்கராஜ் தனது சமூக வலைதளத்தில் தற்போது வரை எந்த பதிவும் போடவில்லை.

வழக்கறிஞரான சுருதி ரங்கராஜ் தனது கணவர் விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →