மீண்டும்‌ மகாராஜா மேஜிக்.. விஜய் சேதுபதியின் கணக்கு

Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியானது மகாராஜா. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியானது. முடி திருத்துபவர் கதையை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது.

ஒரு தந்தையின் பழிவாங்கும் படலமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். உணர்ச்சிபூர்வமான இந்த கதைகளும் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. கிட்டத்தட்ட 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

அதோடு மட்டுமல்லாமல் ஓடிடியிலும் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. ரஜினி, விஜய் போன்ற பிரபலங்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி இருந்தனர். இந்த வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் ஏஸ் படம் வெளியானது.

மீண்டும் இணையும் மகாராஜா கூட்டணி

இப்படம் வணிக ரீதியாக தோல்வியை கொடுத்தது‌. அதேபோல் இயக்குனர் நித்திலன் அடுத்ததாக நயன்தாராவை வைத்து படம் இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் அது டிராப்பானதாக சொல்லப்பட்ட நிலையில் மீண்டும் மகாராஜா கூட்டணி இணைய இருக்கிறதாம்.

அதாவது மீண்டும் மகாராஜா போன்ற ஒரு மாஸ் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கணக்கு போட்டிருக்கிறார். இதனால் நித்திலனும் விஜய் சேதுபதியும் இணையும் அடுத்த படம் மகாராஜா பார்ட் 2 படமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. ஆகையால் மீண்டும் மகாராஜா போன்ற ஒரு மேஜிக் படம் விரைவில் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →