இன்றைய காதலை எதார்த்தமாக கூறும் மணிகண்டன்.. லவ்வர் ப்ரிவ்யூ ஷோ ட்விட்டர் விமர்சனம்

Lover Preview Show Twitter Review: பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரிப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் லவ்வர். காதலர் தினத்தை குறி வைத்து தயாராகி இருக்கும் இப்படம் நாளை சூப்பர் ஸ்டாரின் லால் சலாமுக்கு போட்டியாக வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே ட்ரைலர், ஸ்னீக் பீக் வீடியோ மூலம் இப்படம் ஒரு எதிர்பார்ப்பை தூண்டி இருந்தது. இந்நிலையில் படத்தின் பிரிவ்யூ ஷோவை பார்த்த பிரபலங்களும் சோசியல் மீடியாவில் தங்கள் பாசிட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் அனைவருமே படம் நல்ல ஒரு பீல் குட் உணர்வை கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் படம் வெளியான பிறகு சில ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகுக்கும் என்ற கருத்துக்களும் வெளியாகி உள்ளது.

மேலும் எதார்த்தமான நேர்மையான காதல் கதையில் மணிகண்டனின் நடிப்பும் வழக்கம்போல சிறப்பாக இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் இவருடைய கதாபாத்திரம் அமைக்கப்பட்ட விதமும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

அதேபோல் நச்சுத்தன்மையுள்ள நவீன கால காதலை எதார்த்தமாக காட்டி இருக்கும் கதையும், அதை புத்துணர்வோடு கொடுத்த இயக்குனருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படியாக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் லவ்வர், மணிகண்டனுக்கு இந்த வருட சிறப்பான தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →