மொத்தத்தையும் உளறி கொட்டிய மன்சூர் அலிகான்.. பெரும் அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது லியோ படம். திரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். ஆரம்பத்திலேயே இந்த படத்தில் மன்சூர் அலிகான் நடிக்க உள்ள செய்தி அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருந்தது.

ஆனால் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த போது அதில் மன்சூர் அலிகான் கலந்து கொள்ளவில்லை. ஆகையால் லியோ படத்தில் மன்சூர் அலிகான் இருக்கிறாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பட பூஜையில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் இடம் பத்திரிக்கையாளர்கள் லியோ படத்தை பற்றி கேள்வி எழுப்பினர்.

அதில் எப்போதும் போல தன் பாணியில் எல்லாவற்றையும் மனுஷன் உளறி கொட்டி விட்டார். அதாவது எவ்வளவு நாள் கால்ஷீட் கேட்டார் என்று ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்லிவிட்டாராம். மேலும் காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பில் லோகேஷ் தன்னை அழைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள லியோ படபிடிப்பில் தான் கலந்து கொள்வேன் என்று மன்சூர் அலிகான் கூறியுள்ளார். மேலும் லியோ படத்தை பற்றிய சில விஷயங்களை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருந்தார். எப்போதுமே லோகேஷ் தனது விஷயங்கள் எதுவும் கசிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

மேலும் தன்னுடைய விக்ரம் படத்தில் கூட சூர்யா நடிப்பதை மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருந்தார். ட்ரெய்லர் வெளியாக இருந்த சில நாட்களுக்கு முன்பு தான் சூர்யா இந்த படத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்திருந்தது. அதனால் டிரைலரில் சூர்யாவின் காட்சியை லோகேஷ் வைத்திருந்தார்.

அதேபோல் மன்சூர் அலிக்கானுக்கு லியோ படத்தில் தரமான கதாபாத்திரத்தை லோகேஷ் கொடுக்க நினைத்திருந்தார். ஆனால் இப்போது வாயை கொடுத்து எல்லா விஷயத்தையும் உளறி கொட்டி விட்டார். ஆகையால் படத்தில் நடித்தால் மொத்தத்தையும் உளறி கொட்டிடுவார் என்ற பயத்தில் லோகேஷ் என்ன முடிவு எடுக்கிறார் என்பது விரைவில் தெரியவரும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →