மார்ச் 7 ஓடிடியில் வெளியாகும் 19 படங்கள்.. விடாமுயற்சியை ஓரம்கட்ட வரும் மணிகண்டன்

March 7 OTT Release Movies: தியேட்டரை காட்டிலும் மக்கள் ஓடிடியில் அதிகம் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் இந்த மார்ச் 7 ஆம் தேதி 19 படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. இப்போது மார்ச் மூன்றாம் தேதி வெளியான அஜித்தின் விடாமுயற்சி படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

நாக சைதன்யா, சாய்பல்லவி நடிப்பில் வெளியான தண்டேல் படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரேகா சித்திரம் படம் சோனி லைவ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

மணிகண்டன் நடிப்பில் வெளியாகிய குடும்ப ரசிகர்களை கவர்ந்த குடும்பஸ்தன் படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் ராஜாகிளி படம் டென்ட் கோட்டா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மார்ச் 7 ஓடிடியில் வெளியாகும் படங்கள்

ஆஹா ஓடிடி தளத்தில் குழந்தைகள் முன்னேற்ற கழகம் படம் மார்ச் 7 வெளியாகிறது. தெலுங்கில் பாபு ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும், லைலா படம் ஆஹா ஓடிடி தளத்திலும் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

இந்தியில் Nadaaniyaan நெட்பிளிக்ஸிலும், Dupahiya பிரைம் சீரிஸ், The Waking Of A Nation சோனி லைவ் சீரிஸ் ஆகிய தளங்களில் வெளியாகிறது. ஆங்கிலத்தில் Cut Throat City ஹாட் ஸ்டார், Daredevil Born Again ஹாட் ஸ்டார், Chaos The Mansion Murders நெட்ஃபிளிக்ஸ், Second Chance Stage ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

ஜெர்மன் மொழியில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் Delicious, ஸ்பானிஷ் மொழியில் நெஃபிளிக்ஸ் சீரிஸில் Medusa,The Leopard, Just One Look ஆகியவை ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment